பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 12

இயக்கத்தைப் பாரிய அளவில் பெருக்கினர். ஆந்திர நாட்டில் இராமானுசர், கன்னட நாட்டில் புரந்தரதாசர், வட நாட்டில் கபீர்தாசர், இராமதாசர் ஆகியவர்கள் முயற்சிகளால்

வியக்கம் கன்னட நாடு, மகாராஷ்டிரம், கூர்ச்சரம்,மாளவம், பாஞ்சாலம் ஆகிய இடங்களில் பரவியது. 18-ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் இராமாயணம் இதை வடவிந்தியாவெங்கும் நிலைக்கச் செய்தது.

தாய்மொழிப் புரட்சி: 12-ஆம் நூற்றாண்டு

தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு நீங்கலாக மற்ற எல்லா இந்தியத் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் இந்தப் பத்தி இயக்கமே முதல் தூண்டுதல் தந்துள்ளது. தமிழ், கன்னடம் உட்பட எல்லா மொழிகளின் ஆயிர ஆண்டு வளர்ச்சி, இப்பத்தி இயக்கம் தந்த வளர்ச்சியேயாகும். இவ்வியக்கம் தமிழகம் கடந்து பரவிய காலமாகிய 12-ஆம் நூற்றாண்டே இந்தியாவின் தாய்மொழிப் புரட்சிக்காலம் என்னலாம்.

இந்தியத் தாய்மொழிகளில் சமஸ்கிருதம் பேரளவில் கலக்கத் தொடங்கிய காலம், இந்தப் பன்னிரண்டாம் நூற்றாண்டே. தொடக்க ஆர்வத்தில் கலப்பு எல்லையற்றுப் பொங்கியிருந்தது. இரு மொழிகளின் கலப்பைப் புலவர் ஆர்வத்துடன் வரவேற்றனர். அக்கலப்பு, முத்துடன் பவழம் கலந்தது போன்ற அருமையுடையது என்று கருதி, அந்நடையை அவர்கள் மணிப்பிரவாளம் அல்லது மணிமிடை பவளம் என்று வழங்கினார்கள். தொடக்கக் கால வைணவ சமயப் பேருரைகள் தமிழகத்தில் இந்நடையிலேயே எழுதப்பட்டுள்ளன.

பண்பு மயக்கம்

உபநிடத இயக்கம், பத்தி இயக்கம் ஆகிய இரு பேரலைகளையும் அவற்றின் கிளை அலைகளையும் வரலாற்றாசிரியர் கவனியாது, அரசியல் நிகழ்ச்சிகளிலேயே முழுக்கருத்தும் செலுத்தினர். ஆனால், இவ்வியக்கங்கள் இந்தியாவின் வாழ்வுக்கும் உலக நாகரிகத்திற்கும் பயன்பட்ட அளவு தொடர்ச்சியான வளர்ச்சிப் பண்பு எதனையும் இந்திய அரசியல் வாழ்வில் காண முடியாது. இதனை வரலாற்றாசிரியரே