பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

43

ஓரளவு ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் இதற்குக் கூறும் காரணங்கள் பொருத்தமற்றவை. இந்திய நாகரிகம் சமயச் சார்பானது என்றும், கிராம வாழ்வு எளிய வாழ்வு ஆகிய வற்றிலேயே மனநிறைவுற்று, அஃது உயர் உலகியல் வாழ்வை நாடாதிருந்ததென்றும், அரசியலிலோ இவ்வுலக வாழ்விலோ அக்கறை இல்லாமல், மேலுலக வாழ்விலேயே கண்ணாயிருந்த தென்றும் அவர்கள் கூறுகின்றார்கள். இவை எவ்வளவு பொருந்தாக் கூற்றுகள் என்பதைச் சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பண்டித ஜவஹர்லால் சுட்டிக் காட்டிய முடிபுகளும், உபநிடத இயக்கம், பத்தி இயக்கம் ஆகியவற்றின் போக்குக்களும் நன்கு காட்டும்.

இந்திய வரலாற்றாசிரியருள் பலர் மேனாட்டினர். அவர்களுட் பெரும்பாலார் மேற்கூறிய கொள்கைகளை வாளா ஏற்றதுடன் நில்லாது, பல வகையில் வலியுறுத்தி வளர்க்கவும் செய்தார்கள். இந்தியாவின் கடற்கரையோரம் வளைவு நெளிவின்றிச் செவ்விதாயிருப்பதால், இந்தியர் கடல் மனப்பான்மை உடையவராயில்லையென்றும்; தொழில், அறிவியல், அரசியல் வளர்ச்சிகளுக்கு இடமேற்படவில்லை யென்றும்; பிரிட்டிஷார் வந்த பின்னரே இவற்றுக்கு இடமேற்பட்டதென்றும் அவர்கள் வரைந்துள்ளார்கள். இது வரலாற்றில் கண்ட செய்திகளை இருட்டடிப்பதாகும்.

கடல் வாணிகளம்

மொகஞ்சதரோக் காலத்திலிருந்தே இந்திய நாடு பருத்தித் தொழிலில் தலை சிறந்திருந்தது; பாபிலோனியா, எகிப்து என்னும் நாடுகளுடன் அது வாணிகம் செய்திருந்தது. அந்நாடுகளில் அன்றே இந்தியர் குடியேற்றங்களும் இருந்தன என்பதை அறிகிறோம். கி.மு. பத்தாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திலிருந்து குரங்குகளும், யானைத் தந்தங்களும், அகிலும், மயிலிறகும், முத்தும் பாலஸ்தீனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டிருந்தன. கிறிஸ்து பிறப்புக்கு முன்னும் பின்னும் கிரேக்க வாணிகமும் உரோம் வாணிகமும் தமிழகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தன. உரோம உயர்குடி மாதரும் இளைஞரும் இந்திய ஆடையணி மணிகளையே பெருவிலைக்கு