44
அப்பாத்துரையம் - 12
வாங்கியதால், உரோமப் பேரரசின் செல்வம் சீரழிவதாக அந்நாட்டு அரசியல் மன்றில் 'கேட்டோ' என்பவர் கழறியுள்ளார். அதற்கேற்ப, மலையாள நாட்டிலும், தமிழகத்திலும், பிற பகுதிகளிலும் பேரளவான அக்கால உரோமப் பொன் நாணயங்கள் இன்றுவரை அகப்படுகின்றன.
பல்லவர், சோழர் ஆட்சிக் காலங்களில் தமிழர், ஆந்திரர், கன்னடியர், கலிங்கர் ஆகிய பல திறத்தவரும் கடல் கடந்து வாணிகம் செய்து, பர்மா, சயாம்,இந்து சீனா, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றில் குடியேறி, இந்திய மொழிகள், எழுத்துகள், இலக்கியங்கள், சமயக் கருத்துகள் ஆகியவற்றைப் பரப்பியிருந்தனர். பல்லவ சோழ மன்னர் பலரும் இக்குடியேற்றங் களைப் பின்பற்றி அந்நாடுகளின்மீது படையெடுத்து, அவ்வக் காலத்தில் கடல் கடந்த பேரரசுகளை அமைத்திருந்தனர்.
ஆ சி மரபும் குடியாட்சிப் பண்பும்
தன்னாட்டு அரசரும் பேரரசரும் நிலப்படை மட்டுமன்றிப் பெருங்கடற்படையும் வைத்திருந்தனர். தம் நாட்டுப் பாதுகாப்புக்கு மட்டுமன்றித் தொலையிலுள்ள பிற நாட்டுப் படையெடுப்புக்கும் போதுமான நிலப்படையும் கடற்படையும் அவர்களிடம் இருந்தன. இதனாலேதான் அவர்கள் தங்கள் தாயகத்தினின்றும் நெடுந்தொலை ஆதிக்கம் செலுத்த முடிந்தது. விஜயநகரப் பேரரசரும் முற்காலப் பிற்கால வடநாட்டுப் பேரரசுகளும் (சிவாஜியின் பேரரசு நீங்கலாக) கடற்படை வகையில் கருத்துச் செலுத்தவில்லை. கடலகவாழ்வில் கருத்தோய்ந்த இவ்விடையிருட்கால வாழ்வே மேனாட்டவர்க்குக் கடல் வாணிகத்தையும், கடலாட்சியையும் திறந்து விட்டது.
பாண்டியரும் சோழரும் பல்லவரும் நாட்டைப் பல கோட்டங்கள், கூற்றங்கள், வளநாடுகளாகப் பிரித்து, ஒழுங்கான ஆட்சி முறையும் சட்டங்களும் வகுத்து ஆண்டார்கள். திணை நில ஆட்சிகளும்,நகராட்சிகளும்,பஞ்சாயத்து முறையில் நடைபெற்றன. வாணிகத் தொழிற்குழுக்கள் நிலவின நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், மல்லை (மாமல்லபுரம்), பொதுசா (புதுச்சேரி), மரக்காணம் ஆகிய துறை முகப்பட்டினங்களில் வெளிநாட்டு வாணிகர் குடியிருப்புக்களும் பட்டயம் பெற்ற