46
அப்பாத்துரையம் 12
விடுதலை இந்தியாவில் இந்திய வாழ்வு மீண்டும் ஒன்றுபட்டு இவை தங்கு தடையின்றி வளர்ந்தோங்கும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
பேரரசு மரபுகள்
அசோகர், கனிஷ்கர் பேரரசாட்சி, இந்தியாவின் புகழை ஆசியா முழுவதுமே ஒளி பெறச் செய்திருந்தது. ஆனால், அசோகர் இந்திய மண்ணில் தோன்றிய மன்னர். அவர் முன்னோர்கள் காலத்தில் பாரசீக அரசனான கைரஸும், கிரேக்கப் பேரரசனான அலெக்ஸாண்டரும் படையெடுத்து வடமேற்கு இந்தியாவை மட்டுமே ஆண்டனர். கி.மு.2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதல் மூன்று நூற்றாண்டு வரையிலும் பாக்டிரியரும், பார்த்தியரும், குஷானரும் படையெடுத்தனர். மேற்குப் பகுதியில் பார்த்தியர் மரபு நீண்ட நாள் ஆண்டு வந்தது. கனிஷ்கன் குஷான மரபைச் சேர்ந்தவன். இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள புருஷபுரி என்னும் பெஷாவரைத் தலை நகராகக் கொண்டு சிந்து சமவெளி முழுவதையும் பார்த்தியா பாக்டிரியா நாடுகளுடன் சேர்த்து அவன் ஆண்டான். அவன் ஆட்சிக்குப்பின் ஊணர் படையெடுப்பால் இந்தியா மீண்டும் சீரழிந்தது.
கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் கிழக்கிந்தியாவிலிருந்து மீண்டும் குப்த மரபு என்ற பேரரசு மரபு தோன்றிற்று. சமுத்திர குப்தர் இந்தியா முழுவதும் திக்கு விஜயம் செய்தார் என்றும், கங்கை வெளியையும் கூர்ச்சரத்தையும் ஆண்டார் என்றும் அறிகிறோம். இரண்டாம் சந்திரகுப்தர் காலம் முதல் நான்கு நூற்றாண்டுகளாக வடநாட்டில் வடமொழி தழைத்தது; கலைகளும் அறிவியல்களும் ஓங்கின. காளிதாசன் என்ற இந்தியாவின் தலைசிறந்த முதல் வரிசை வடமொழிக் கவிஞன் வாழ்ந்ததும், வராஹமிஹிரர், ஆரியபட்டர் முதலிய கணித நூலாரும், சுசுருதர் முதலிய மருத்துவ நூல் அறிஞரும் வாழ்ந்ததும் இக்காலத்திலேயே, சீனநாட்டுப் புத்த யாத்திரிகரான பாஹியான், ஹியூன் சுவான்ங் ஆகியவர்கள் இந்தியா வந்து இக்கால நிலைபற்றி நமக்கு எழுதித் தெரிவித்துள்ளார்கள்.
கி.பி.7-ஆம் நூற்றாண்டின் வடவிந்தியாவில் தானேசுரத்தி லிருந்து ஆண்ட ஹர்ஷனும், தென்னாட்டில் வடபால்