பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

47

வாதாபியிலிருந்து ஆண்ட புலிகேசியும், தமிழகத்தில் காஞ்சியி லிருந்து ஆண்ட பல்லவனும், மதுரையிலிருந்து ஆண்ட பாண்டியனும் பேரரசராயிருந்தனர். இதன்பின் வடவிந்தியா மீண்டும் ஊணர் படையெடுப்பால் சீரழிந்தது. இச்சமயம் மார்வார்ப் பகுதியிலிருந்து இந்தியாவின் பண்டைவீரப்பண்பைப் பாதுகாத்த ரஜபுத்திரர் இந்திய அரசியல் வாழ்வின் சீரழிவை வடவிந்தியா முழுவதிலும் சிலகாலம் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அரசுகளும் பேரரசுகளும் நிறுவி ஆண்டார்கள்.

விடுதலை இழந்த வகை

ராஜபுத்திர அரசருள் தில்லியிலிருந்து ஆண்ட பிருதிவியும், அவர் அண்டை நாட்டு மன்னரான ஜயசந்திரரும் தம்முட் கொண்ட பகைமை காரணமாகவே ஆப்கானிய அரசனான முகம்மது கோரி இந்தியாவுக்குள் வரவழைக்கப்பட்டான். இந்தியா விடுதலை இழந்ததற்குரிய காரணங்களுள், ஒற்றுமை யின்மையும், போட்டி பொறாமையுமே முக்கியமானவை என்பதை ஜயசந்திரர் செயல் எடுத்துக் காட்டுகிறது. முகம்மது கோரி வழியில் வந்த ஆப்கானிய மரபுகளில் கடைசி மரபில் வந்த இபுரஹிம் லோடி என்பவனும் இதுபோலவே தன் உள்நாட்டு எதிரி ஒருவனை அழிக்கக் காபூலில் ஆண்ட முகலாய மன்னனான பாபரை வரவழைத்தான். இவ்விரண்டாவது பொறாமைச் செயல் இரண்டாவது தடவையும் மற்றோர் அயலாட்சியை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.

முகலாயப் பேரரசு வடநாட்டில் இரண்டு நூற்றாண்டு களுக்கு நல்லாட்சியும் நாட்டில் ஒற்றுமையும் விளைவித்தது. அக்பர், அசோகரின் பழம்புகழைப் புதுப்பித்தார். இடையே சிறிது காலம் ஆண்ட ஆப்கானிய மன்னனான ஷெர்ஷா, அக்பருக்கும் பிற்கால பிரிட்டிஷ் ஆட்சிக்கும் வழிகாட்டியான பல நல்ல திட்டங்களை வகுத்தான். இந்த முஸ்லிம் ஒற்றுமை, இக்கால வெள்ளி நாணய முறை, வரி வசூல் முறை ஆகியவை இன்றும் ஷெர்ஷாவின் முறைகளேயாகும். அசோகர் கால ஆட்சி மரபே ஆந்திர, பல்லவ, சோழ பாண்டிய அரசு முறைகளின் வாயிலாகத் தொடர்ந்து, ஷெர்ஷா ஆட்சி மூலமாக இன்னும் செயலாற்றி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.