48
அப்பாத்துரையம் - 12
முகலாய ஆட்சி 18-ஆம் நூற்றாண்டில் சரியத் தொடங்கிற்று. இதே சமயம் மேற்கே தக்காணத்தில் மகாராஷ்டிரத்தில் இந்தியாவின் வீரப்புலியேறான சிவாஜி பேரரசாட்சி அமைத்ததுடன் தக்காணத்திலுள்ள முஸ்லிம் அரசுகளின் எல்லையைக் கடந்து, தமிழகத்தில் தஞ்சையிலும் ஒரு கிளைப் பேரரசு அமைத்தார். அவர் காலத்துக்குப் பின் வடக்கேயுள்ள அரசுகள் நிஜாம் அரசாய் ஒன்றுபட்டன. தெற்கே மைசூரில் ஹைதரும், திப்புவும் பேரரசு நாட்டினர்.
வணிகராய் வந்த பிரிட்டிஷார், தெற்கிலிருந்தே தமது ஆதிக்கத்தைப் பரப்பினர், மகாராஷ்டிரரும் திப்பபும் அதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். நிஜாம் வலிமையற்ற அரசாய் இருந்ததால், இந்திய எதிர்ப்புக் கோட்டையைப் பிரிட்டிஷ் தாக்குதல் அவ்விடத்தில் துளைத்துத் தகர்த்தது.
தற்கிடையில் வடக்கே நாதர்ஷா படையெடுப்பு, தளர்ந்து வந்த முகலாயப் பேரரசைத் தகர்த்தது. 1763ல் மராட்டிரர், முகலாயர், ரஜபுத்திரர் ஆகிய பல திறத்தினரும் இந்திய வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒன்றுபட்டுத் திரண்டனர். ஆப்கானிஸ்தானத்திலிருந்து படையெடுத்த அகமதுஷா அப்துரானியை அவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், ஒற்றுமையின் வலிமைக்குரிய காலம் மலையேறிவிட்டது. அனைவரும் ஒருங்கே மூன்றாம் பானிப்பட்டுப் போரில் அழிவுற்றனர்.
பிரிட்டிஷ் அயலாட்சியின் பிடியை எதிர்த்து இந்தியா தெற்கே போராடுகையில், வடவிந்தியாவுக்கு மூன்றாவது பானிப்பட்டு கொடுத்த அடி, அதையும் எளிதில் அயலாட்சிக்கு இரையாக்கத் தொடங்கிற்று. ஆனால், இதுவரை அயலார் படையெடுப்பில் போர்முனை முன்னணியில் இருந்த பாஞ்சாலம். இப்போது அதன் பின்னணியிலிருந்தது, இது வரையில் அதன் பின்னணியில் இருந்த தமிழகம், இப்போது முன்னணியிலிருந்தது, இவ்விரண்டு கோடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் தனி முக்கியத்துவம் உடையன. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி ஆதிக்கப்போர் பாஞ்சாலத்திலும் வடமேற்கு இந்தியாவிலுமே நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் கோட்டையை