3. அயலாட்சியும் அடிமைத்தளைகளும்
பாரதம் அன்றும் இன்றும்
“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்- இவள் என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள்தாய்.’
னவாராய்ச்சி, புதை-
பாரத தேசத்தின் பழமை அரியது; பழம்புகழ் பெரியது. வரலாறு, மொழியாராய்ச்சி, பொருளாராய்ச்சி ஆகிய பல துறைகளுக்குரிய கலைவாணர்கள் இவற்றை விளக்கியுள்ளார்கள். பாரதத்தின் பழம்புகழுக்கு அவர்கள் சான்று தருகின்றார்கள். கவிஞர் பாரதியார் இப்பழம்புகழ் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறார். இதில் வியப்பில்லை. நாமும் இப்புகழை எண்ணி மகிழலாம்; பெருமை கொள்ளலாம். ஏனெனில், இது நம் வழிவழி மரபுச் செல்வம், ஆனால் பாரதியாரே,
66
இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று, வறுமை மிஞ்சி,
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம்......
99
என்று அதன் அணிமைக்கால அடிமை நிலையை நினைந்து, மனமுடைந்து, கண்ணீர் சிந்தியுள்ளார்.
ஆம்! பனி மலையின் உச்சி போன்ற ஈடும் எடுப்பும் அற்ற உயர்வுடையது நம் பண்டைப் புகழ். ஆனால், ஆழ்கடலின் ஆழ்கசம் போன்ற அவல நிலையுடையது நம் அணிமைக்கால