பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

51

நிலை. இத்தனை ஏற்றம் உடையவராயிருந்த நாம், இத்தனை வீழ்ச்சி அடைந்தது எவ்வாறு? பனி மலையின் உச்சியிலிருந்து நாம் எப்படி ஆழ்கடலின் ஆழத்திற்கு உருண்டு வந்து விட்டோம்? உருண்டு வந்த வகை யாது? இனி உருண்டு வந்த வழி மீளும் வகை

என்ன?

பாரதத்தில் பற்றுடைய எவரும் பாரதியார் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தக் கேள்விகளைக் கேட்காமலிருக்க முடியாது.

யாழின் இசையால் மக்கள் மகிழ்வது இயல்பு. ஆனால், யாழில் மகிழும் அளவுக்கு யாழ் நரம்பின் கோளாற்றில் அவர்கள் கருத்துச் செலுத்தாமலும் இருக்க முடியாது. ஏனெனில், யாழிசை எந்த அளவு மகிழ்ச்சி தருகிறதோ, அந்த அளவில் நரம்பின் பிழை கேட்பவருக்குத் துன்பம் தருவது உறுதி.

வடிவம் ஒன்று; வண்ணம் வேறு

பாரதத்தின் வரலாறு கடந்த வரலாற்றின் வாயிலிலேயே நாம் அதன் முழு வடிவத்தையும் காண்கிறோம். அவ்வடிவத்தின் முழு அளவையும் நாம் காண முடியாவிட்டாலும், அதன் தனிப்பண்புகளும் சிறப்புப் பண்புகளும் அதில் தெள்ளத் தெளியப் புலனாகின்றன. எனவே, 'பண்டைப் பாரதம் வேறு; இன்றைப் பாரதம் வேறு' என்று கூறி நம் அணிமை இழிநிலைக் கான பொறுப்பை நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. வடிவு இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன.ஆயினும், பண்டைவடிவம், புகழ் ஒளி வீசப் பொலிவுறுகிறது; அணிமை வடிவம், அடிமை அரையிருளில் மங்கி மறுகுகிறது; அதன் நிழலில் வளர முடியாமல் நலிவுறுகிறது. ஒரே வடிவம் இவ்விரு வேறு நிலைகளை அடைவதற்குரிய சூழ்வண்ணக்கூறுகள் யாவை? முன்பு தழைத்த அதே பயிர், பிற்பட இடைக்காலத்தில் வாடுவானேன்?

வரலாற்றுக்கு முற்பட்ட பாரதம், எகிப்தையும், சால்டியாவையும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டிற்று. அதன் பின் அது கிரேக்க உரோம வாழ்வுகளுடன் கூடிக்குலாவிற்று. உலக வரலாற்றில் இடையிருட்காலத்திலுங்கூட அது நாகரிக ஒளி சிற்று. எனவே, அது பண்டைப் புகழின் உயர்வு உடையது மட்டுமன்று; மூவா இளமையும் சாவா உயிர்ப்பண்பும் உடைய கன்னிப்புகழ் வாய்ந்தது. பிற நாகரிகங்கள் கடந்து வாழும்