பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 12

இக்கன்னிப்புகழுக்குரிய அதன் சிறப்புப் பண்புகளை நாம் உணர வேண்டும். அதே சமயம், 'இத்தனைச் சிறப்புடைய அப்பண்பு களையும் மங்கி மறுக வைக்கும் சார்பு பண்புகள் யாவை?' என்றும் நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். முந்தியவற்றை அறிந்து வளர்க்குந்தோறும் நாம் உயர்வோம். அதுபோலப் பின் கூறப்பட்டவற்றை அறிந்து விலக்குந்தோறும் நாம் இன்னும் உயர்வு பெறுவோம் என்பதில் ஐயமில்லை.

பாரதத்தை நலிய வைத்த இக்குறைகள் உள்ளார்ந்தவையா, எளிதில் அகற்ற முடியாதவையா? இவை சார்பு வழுக்களா? எளிதில் அகலக் கூடியவைகளா? அதனை உயர்வுபடுத்திய பண்புகள் உள்ளார்ந்தவையா? சார்புக் கூறுகளா?

பண்புகள் உண்மையில் பேரளவில உள்ளார்ந்தவை என்றே கூற வேண்டும். ஏனெனில், அவை தொன்றுதொட்டு இந்தியாவின் தனிச் சிறப்பைப் பேணியுள்ளன. வழுக்களும் ஓரளவு உள்ளார்ந்தவையாயிருக்கக் கூடும். உள்ளார்ந்தவை யாயினும், நாம் அரும்பாடுபட்டு அவற்றைக்

களைய்

வேண்டுமென்பதில் எவருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஆனால் இவ்வழுக்கள் உள்ளார்ந்தவையாயினும், அல்லவாயினும், வரலாற்று வாயிலில் நாம் இவற்றை மிகுதி காண முடியவில்லை என்பது மட்டும் உண்மை. புதை பொருளாராய்ச்சியாளர் முடிபுகளும், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற நாட்டுப் பற்றும் மனித இனப்பற்றும் நிறைந்த நல்லறிஞர் கூற்றுகளும் இதனை நமக்கு உணர்த்துகின்றன.

ஒற்றுமைக் கேடு

சிந்துவெளி நாகரிகம், சிந்துவெளிக்கு மட்டும் உரியதன்று. கிட்டத்தட்ட சிந்துவெளியிற் கண்ட புதைபொருள்களைப் போன்ற பிறவற்றைக் காசுமீரம் துல் கன்னியாகுமரி வரை, பலுச்சிஸ்தானம் முதல் அஸ்ஸாம் வரை காண்கிறோம். எங்கும் அதே நகர வாழ்வு, அதே கடல் வாணிகச் சின்னம். அதே வகைக் கலை மரபுகள், பழக்க வழக்கச் சின்னங்கள் ஆகியவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கண்டெடுத்துள்ளனர். இது மட்டுமன்றி, இன்று இந்தியா முழுவதும் வழங்கும் சமயவாழ்வின்