பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

53

அடிப்படை, மொழிகளின் எழுத்து வடிவங்களுக்குரிய அடிப்படை ஆகியவற்றைச் சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் காட்டுகின்றன. ஆகவே, சிந்துவெளி நாகரிகம் பண்டைய இந்தியாவின் புகழுச்சியை மட்டும் காட்டவில்லை; இந்திய மாநிலமளாவிய அதன் பரப்பையும் காட்டுகிறது. பல கூறுகளில் இந்தியாவைக் கடந்து அக்கால நாகரிகம் உலக முழுவதும் அளாவியிருந்தது என்று கூறவும் இடமுண்டு. விடுதலை இந்தியா அல்லது பாரதத்தைக் கடந்து அது பாகிஸ்தானிலும் பரவியிருந்தது என்பதை மோகஞ்சதரோ, ஹரப்பா ஆகியவற்றின் இருப்பிடமே காட்டும். பிந்தியது, பாரதத்திலேயே உள்ளது. ஆனால் முந்தியது இன்றைய மேலைப் பாகிஸ்தானத்திலேயே இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகத்தில் நாம் காணும் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டை இந்திய மாநிலத்தில் நாம் இன்று காண முடியவில்லை. இம்மாறுதலின் ஒரு கூற்றைப் பண்டித ஜவஹர்லால் நேருவே திறம்படச் சுட்டிக்காட்டுகிறார்.இன்றைய சமய வாழ்வின் சின்னங்களைச் சிந்து வெளியில் காண்கிறோம்; ஆனால், அக்கால வாழ்வு சமயச் சார்பற்ற வாழ்வென்பதையும் அறிகிறோம். சமயம் அன்று வாழ்வின் ஒரு கூறாய் இருந்தது.

ன்று வாழ்வு, சமயத்தின் ஒரு கூறாய்ச் சிறுத்து விட்டது. உலகளாவப் பரந்து செல்லத்தக்க பண்புகளையுடைய அதன் அகன்ற வாழ்வு, குறுகிய எல்லையுடைய ஒரு சமய வாழ்வில் கட்டுப்பட்டு விட்டது. மக்கள் சமயமாயிருந்த அது, இன்று சமய வாணிகராகிய குருமார் சமயமாகிவிட்டது.

இன்று இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்து முறைகளும்- வடக்கு, தெற்கு, மேற்கு என்ற வேற்றுமையின்றிச் சிந்துவெளி ஓவிய வடிவெழுத்துகளின் வழி வந்தவைகளே என அறிஞர் கருதுகின்றனர். ஆனால், இன்று மொழிகள் மிகப் பலவாகியுள்ளன. அது மட்டுமன்றி, மொழிக் குழுக்களும் பல. மேலை மொழிக்குழு, கீழை மொழிக்குழு, தென்மொழிக்குழு, பண்படாப் பழங்குடி மொழிக்குழு என அவை பல வகையாகப் பிரிவுற்றுள்ளன.

இவை தொன்றுதொட்டு நிலவிய வேறுபாடுகள் என்று கூறுவதற்கு இடமில்லை. ஏனெனில், பண்டைப் பண்பாடும்