இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
57
ஓருலகம் என்ற திசை நோக்கிச் செல்லவில்லை என்பது தெளிவு. தனி மனிதர் கூட்டுழைப்பு, அரசர் கூட்டுறவு கியவற்றைக்கூட அது தடுத்து நிறுத்திற்று. அத்துடன் மக்கள் ஒழுக்க முறை அரசியலொழுக்க முறையுடனோ, அரசியல் ஒழுக்க முறை மக்கள் ஒழுக்க முறையுடனோ தொடர்பற்றுப் போயின. நந்தர், மௌரியர், குப்தர் கால அழிவுப் போட்டிகளும், அரசியற் புரளிகளும் பாண்டியர், சோழர், சேரர் பழி வாங்கும் அழிவுப் போட்டிகளும், இப்போக்கைக் காட்டுகின்றன. ஜயசந்திரரின்
னப்பழியும், இபுராஹிம் லோடியின் இனப்பழியும் அரசியல் வாழ்வில் எல்லா நாட்டிலும் காணத்தக்கவையேயானாலும், அவை வேறு எந்நாட்டிலும் அரசியல் வாழ்வின் தொடர்ந்த அடிப்படை மரபாய்விடவில்லை. குடியாட்சித் தொடர்பு இம்மியுமில்லாத மன்னர் வாழ்விலேதான் இந்நிலை ஏற்பட முடியும்.
பொருளியல்: போர்த்துறை
இறுதியாக ஆராய வேண்டிய பண்புகள், பொருளியல் வாழ்வும், போர் வாழ்வும் ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் தனியுயர் சிறப்பு, அதன் வாணிக வளமும் நகர வாழ்வும் உயர்தர வாழ்க்கைத் தரமுமே. வரலாற்றுக் காலத்தில் வங்கம், தென்னாடு, மராட்டிரம் ஆகியவற்றின் வாழ்வில் இதே கடல் வாணிக வளத்தைக் காண்கிறோம். பண்டை வடமொழி நூல்களும் தமிழ் நூல்களும் அக்கால நகர் வாழ்வுச் சிறப்புக்குப் பல சான்றுகள் தருகின்றன. வடநாட்டின் பண்டை வாழ்வைப் பெருங்கதையும், தென்னாட்டின் பண்டை வாழ்வைப் பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய நூல்களும் தெள்ளத்தெளிய உணர்த்துகின்றன.
போர்த்துறையின் சிறப்பைச் சிந்துவெளி நகரங்களின் கோட்டை கொத்தளங்கள் விளக்குகின்றன; இருக்கு வேதமும் இவற்றின் சிறப்பைக் கூறுகின்றது. வரலாற்றுக் காலத்தில் மக்கள் போர் வெறியும் போர் வீரமும் உடையவர்களாகவேயிருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியத்தால் அறியலாம். ஆனால், இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் போர்கள் பெருகின. அதே சமயம் போர் வீரர் வாழ்வு வளம் பெறவில்லை. சமுதாயத்தில் அவர்கள் மதிப்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே குறைந்து விட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்கள் குற்றப் பரம்பரை