இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
59
குரவர் பேரரசு மரபை மாற்றி, சுங்கரையும் கண்ணுவரையும் தவிசேற்றினர். இவர்கள் காலத்தில் சமய வகுப்புக்கு உயர்வு தாராத புத்த சமயம் நலியத் நலியத் தொடங்கிற்று; வகுப்பினர்களின் சமூகப்படி உயர்ந்தது.
சமய
புத்த சமயத்தவரான கனிஷ்கர் மரபின் ஆட்சி நலிவுற்றபின், அவர் மரபினர் படிப்படியாகச் சைவ வைண வங்களைத் தழுவினர். இது சரியும் கோட்டைக்குப் புதிய வலுத்தேடும் முயற்சியாகவே அமைந்தது.
க
புத்த சமயத்தையும் பிற சமயங்களையும் சரிநிகராக நடத்தின ஹர்ஷர் மரபு அவருடன் ஒழிந்தது.
தென்னாட்டில் முற்காலப் பாண்டிய பல்லவப் பேரரசர் வீழ்ச்சியுடன் சமண சமயமும் செல்வாக்கிழந்தது. பிற்காலப் பல்லவர், சோழர் ஆட்சியில் சமண புத்த சமயங்கள் அழிவுற்றன; சைவ வைணவங்கள் வளர்ந்தன. சமண புத்த சமயங்களை எதிர்த்தும், சமஸ்கிருதக் கலைகளை வளர்த்தும் வந்ததனாலேயே அவர்கள் பேரரசு வடஇந்தியாவரை எளிதில் வளர்ந்தது.
அயலாட்சி கண்ட நாட்டு நிலை: சமய வாழ்வு
அராபியர் படையெடுப்பின் போது இந்தியாவில் புத்த சமயத்தை எதிர்த்து அழித்துச் சமண சமயமும், சமண சமயத்தை எதிர்த்து அழித்துச் சைவமும், சைவத்தை எதிர்த்து மேலோங்கி வைணவமும் வாழ்வு பெற்றிருந்தன. சமயஞ் சார்ந்த இவ்வரசுப் போட்டிகள் காரணமாகவே, இஸ்லாம் சமயமும் இஸ்லாமிய ஆட்சியும் இந்தியாவில் எளிதில் பரவ முடிந்தது. உள் வேற்றுமை வளர்ச்சி எங்கும் தன்னினப் பகைமையையும், அயலினப் பற்றையும் வளர்த்தது. வடமேற்கிலும் வட கிழக்கிலும் 14-ஆம் நூற்றாண்டு வரை வேதச்சார்பான சமயத்தை எதிர்த்த புத்த சமண சமயத்தவரே எளிதிற் புதிய இஸ்லாமிய சமயத்தை ஏற்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 'தாழ்த்தப்பட்ட வகுப்பினர்' என்ற ஒரு பிரிவினர் ஏற்பட்டதற்கு இன வேறுபாடு மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஏனெனில், அவர்களிடம் தனி இனப்பண்பு