பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 12

எதையும் காண்பதற்கில்லை. உயர்குடிச் செல்வர் நீங்கலாக புத்த சமண சமயம் சார்ந்து எளிதில் சமயம் மாறாத ஏழை மக்கள் அக்காரணத்தால் தம் தோழரைவிடக் குறைந்த உரிமைப்படிக்கு ஆளாயினர் என்று கூறலாம். புத்த சமண சமயங்கள் ஆதரவிழந்த போது இவ்விழிதகவே அவர்களைப் புதிய வெளி நாட்டுச் சமயங்களுக்கு எளிதில் ஆட்படச் செய்திருக்க வேண்டும். தெற்கே 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே தாழ்த்தப்பட்டவர், உரிமை மறுக்கப்பட்டவர் ஆகிய வரிடையேதான் கிறிஸ்தவ சமயம் மிகுதியாகப் பரவியுள்ளது.

கடலாதிக்க மாற்றம்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய வாணிகக் கழகம் கி.பி. 1600லேயே சென்னைக் கடற்கரையில் வந்து இடம் பெற்றது. அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே போர்ச்சுகீசியரும் டச்சுக்காரரும் வந்து வாணிகம் செய்திருந்தனர். பிரிட்டிஷ் வணிகருடன் பிரெஞ்சுக் காரரும் வந்து போட்டியிட்டனர். இந்தியாவில் இந்த எல்லா வெளி நாட்டாருக்கும் எளிதாக வாணிக வாய்ப்பும், அரசியல் சூதாட்ட வாய்ப்பும் ஒருங்கே கிடைத்தன. அச்சமயம் இந்தியா அயலாருக்குத் தன் வாயிலை எவ்வளவு எளிதாகத் திறந்து வைத்திருந்தது என்பதை இது காட்டுகிறது.

பிரிட்டிஷ் வணிகரும் பிரெஞ்சு வணிகரும் போட்டி யிட்டனர். சற்று முன்பு டச்சுக்காரரும் போர்ச்சுகீசியரும் இதே போலப்போட்டியிட்டனர். இந்தியாவில் பிரிட்டிஷாரே வெற்றி பெற்று, நாளடைவில் இந்தியா முழுவதையும் ஆண்டனர். அதே சமயம், மற்றவர்களும் சும்மா இருக்கவில்லை. இன்றும் இந்தியாவில் அவர்களுக்குரிய பல சிறு இடங்கள் இருக்கின்றன. தவிர,தென்கிழக்காசியா எங்கும் பிரெஞ்சுக்காரரும் டச்சுக்காரரும் பரந்துள்ளனர். இதனால், இந்தியாவின் அரசியற் குழப்ப நிலை, இந்தியாவுடன் நிற்கவில்லை; தென்கிழக்காசியா முழுவதும் பரந்திருந்தது என்பதை நாம் காணலாம்.

தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்கா விலும் மேலை நாட்டு வல்லரசுகள் எவ்வளவு எளிதாக அரசாண்டும்,தொழில் வாணிகக் களங்கள் கண்டும், குடியேறியும் வளர்ச்சி பெற்றனவோ, அவ்வளவு எளிதாக நடுகிழக்கு (எகிப்து,