இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
61
மேலை ஆசியா), கிழக்காசியா (சீனா, ஜப்பான்) ஆகிய இடங்களில் வளர்ச்சி பெறவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.
இந்தியாவுக்கும், தென்கிழக்காசியாவுக்கும் இப்பொதுச் சூழல் எவ்வாறு ஏற்பட்டது? பண்டை உலகக் கடல் வாணிகத்தில் பங்கு கொண்ட நாடுகள் மேற்கே பினிஷியாவும், தெற்கே அரேபியாவும், தமிழகமும், கிழக்கே சீனமும் ஆகிய நாடுகளே. தெற்கே அராபியருக்கும் தமிழருக்கும் கடும்போட்டியிருந்தது. இருவருக்கும் இடையே நின்ற கூர்ச்சரநாட்டுக் கடற்கொள்ளைக் காரர் இடை மறித்ததால், அராபியர் மேற்கிலும் தமிழர் கிழக்கிலும் கருத்தைச் செலுத்தினர். பாண்டியரும் பல்லவரும் சோழரும் தொன்றுதொட்டுக் கிழக்கிலும், சேரர் மேற்கிலும் பரவியதற்குக் காரணம் இதுவே. இலங்கை, மலேயா, சுமத்திரா, ஜாவா, கிழக்கிந்தியத் தீவுகள், இந்து சீனா ஆகியவற்றில் தமிழகப் பேரரசுகளும், தென்னாட்டு வாணிகமும், குடியேற்றமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தன. அவற்றின் சின்னங்கள் இன்னும் நின்று நிலவுகின்றன.
தமிழகப் பேரரசுகள் கடலரசுகளாயிருந்ததால், இந்தியாவின் கடற்கோட்டையையும் தென் கிழக்காசியாவின் கடற் கோட்டையையும் காத்து வந்தன. இப்பேரரசுகளுக்குப் பின் வந்த வடவிந்தியப் பேரரசுகள் இக்கடல் மரபை முற்றிலும் புறக்கணித்தன. இதே சமயம், அராபியப் பேரரசும் 1458ல் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையிலேதான் கீழ்த்திசை வாணிகம் முற்றிலும் மேனாட்டவர் வேட்டைக்காடாய் மாறியது.
அயலார் கண்ட தென்னிந்தியா
போர்ச்சுகீசியர் வரும் சமயம் (1498) தென்னாட்டில் பாண்டிய அரசு, விஜயநகரப் பேரரசு, பாமினிப் பேரரசு ஆகியவை நிலவின. பாண்டிய அரசு வீழ்ந்தபின், விஜயநகரம் ஒன்றே தெற்கில் நிலவிற்று. விஜயநகர அரசு வல்லமை வாய்ந்த தாயினும், வடவிந்திய அரசுகளைப் போலவே கடற்படையற்றது. அதன் வீழ்ச்சிக்கும் மேனாட்டவர் வளர்ச்சிக்கும் அதுவே காரணம். விஜயநகர அரசை வெறுத்துச் சேரனாண்ட மலையாளக்கரை முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த