பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 12

சாமூதிரி அரசன், அராபியரையும் போர்ச்சுகீசியரையும் இரு கையேந்தி வரவேற்றான்.

17-ஆம் நூற்றாண்டில் திப்புவும், நிஜாமும், சிவாஜியுமே வளரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்தனர். ஆனால், சிவாஜியிடம் மட்டுமே கடற்படையிருந்தது. பிரிட்டிஷாரைத் திப்பு, நிலத்திலும், சிவாஜி, கடலிலும் தோற்கடிக்க முடிந்தது. ஆனால், இருவரும் ஒன்றுபட முடியவில்லை. நிஜாமோ, வலுவற்றவராயிருந்தார். அடுத்த நூற்றாண்டிற்குள் திப்பு, பிரிட்டிஷாரிடம் தம் அமைச்சனான பூர்ணய்யாவால் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிந்தார். சிவாஜியின் மரபினர் ஆட்சியையும் அமைச்சராகிய பேஷ்வாக்கள் கைப்பற்றினார்கள்.பேஷ்வாக்கள் அரசியலில் வல்லவர்கள். ஆயினும் அவ்வரசியல் வல்லமை கடற்படை, நிலப்படை முன் நிற்க முடியாதிருந்தது. தவிர, மராட்டியப் பேரரசின் ஐந்து உறுப்பினரும் தனித்தனி நின்று பூசலிட்டு,பிரிட்டிஷ் ஆட்சிக்கு இரையாயினர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் அடிப்படைத் தூண் என்று கருதப்பட்டவன் கிளைவ். அவனும் பிரெஞ்சு அரசியல் தலைவனான டியூப்ளேயும் பயிற்சிபெற்ற இந்திய வீரரை வைத்துக்கொண்டே இந்தியாவைக் கைப்பற்ற முடிந்தது. உணவுத் தட்டு ஏற்பட்டபோது இந்தியவீரர், கஞ்சி நீருண்டு, வெள்ளையருக்குச் சோற்றையளித்தனர் என்ற கதை, கிளைவ் வரலாற்றில் கூறப்படுகிறது. அந்நாளைய இந்தியாவின் ஒற்றுமைக் குறைவு, அடிமைத்தனம், அயலினப்பற்று ஆகியவற்றை இக்கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்தியா விடுதலை இழந்த வகை இது. அடிமைப் பண்பாகிய மாலை அரைஒளி இந்தியாமீது படர்ந்து, அயலாட்சியாகிய அரையிருளைக் கொண்டு வந்தது. ஆனால், அவ்வயலாட்சி,முழு இருளாய் அமையவில்லை. முழு நிலாக்கால இரவாகவே அது அமைந்தது. ஏனெனில், அடிமைப் பண்புகளை, உறங்கிக்கொண்டே ஏற்ற இந்தியா, உண்மை அடிமைத்தளை கையிலேறிய உடனே விழிப்புற்றது; அயலாட்சிக் காலமே அதன் அரைவிழிப்புக் காலமாகவும் விடுதலைக் கனவுக் காலமாகவும் அமைந்தது.