4. முன்னணி முரசம் மாநிலத்தின் சேமப் பண்ணை
காவிரியாறு சோழ நாட்டை வளப்படுத்தும் செல்வம் ஆனால், காவிரியாற்றுக்கு வளந்தருவது குடமலை. காவிரியில் வெள்ளம் பெருக, சோழ நாட்டில் மழை பெய்ய வேண்டுமென்ப தில்லை; குடமலையில் மழை தூவினால் போதும். அம்மழை வளம் காவிரியின் நீர் வளமாய்ச் சோழ நாட்டின் நில வளமாகிறது.
காவிரியாற்றின் வளத்தைவிடப் புதுமையானது கங்கையாற்றின் வளம். அது பனி மலையில் பிறக்கிறது. பனி மலையில் மழைக்காலத்தில் மழை பெய்கிறது. இது வடவிந்தியத் தாழ் நிலங்களுக்கு நீர்வளம் தருகிறது. ஆனால், கங்கையாற்றின் வளம் அது மட்டுமன்று. பனிக்காலத்தில் மலையில் பனி பெய்கிறது. பனியும் நீரும் குளிரால் உறைந்து பனிக்கட்டி யாகின்றன. வெயிற்காலத்தில் இப்பனிக்கட்டிகள் உருகுகின்றன. பனிவெள்ளம் மழை வெள்ளத்தைவிடத் தாழ் நிலங்களுக்கு மிகுந்த நீர் வளம் தருகிறது.
இந்தியாவின் தேசிய வாழ்வுக்குத் தமிழகம் இத்தகைய குடமலை வளமாகவும் பனி மலை வளமாகவும் விளங்குகிறது.
ய
மொகஞ்சதரோக் கால நாகரிகப் பண்புகளும் உபநிடதக் கால நாகரிகப் பண்புகளும் இந்திய மாநிலம் முழுவதும் இன்றும் அடிப்படைப் பண்புகளாகவே உள்ளன. மேலீடான வேற்றுமைகளைக் கடந்து உள்ளீடான உயிர்நிலை ஒற்றுமைப் பண்புகளாகவும் அவை நிலவுகின்றன. ஆனால், அயலார் படையெடுப்புக்களாலும் அயல் பண்பாட்சிகளாலும் அவை மாநிலத்தின் பல பகுதிகளில் வலுவிழந்துள்ளன. அவற்றின் இயல்பான வளர்ச்சி தடைபட்டுள்ளது. எனினும், தமிழகம் அப்படையெடுப்புகளுக்கும் அயல்பண்பாட்சிகளின் தாக்குதல் களுக்கும் பெரிதும் ஒதுங்கியிருந்தது. எனவே, அஃது