பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

67

வீரசவர்க்கார் அக்கிளர்ச்சியையே ‘1857- ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒரு மூல ஒத்திகை' என்று குறிப்பிடுகிறார். ஆட்சியாளருக்கும் அது 1857-ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒரு முன்னெச்சரிக்கையாகவே அமைந்தது. அது முதல் அவர்கள் படை வீரர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளவும் அவர்கள் கிளர்ச்சி வகையில் முன்னேற்பாடுடையவர்களாயிருக்கவும் தலைப்பட்டார்கள்.

வெறும்படை வீரர்

படை வீரர் கிளர்ச்சிகள், கிளர்ச்சிகளல்ல; அரசியல் கிளர்ச்சிகளின் ஒரு பகுதியே. இதனை ஆட்சியாளர் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர். ஏனெனில், பல மன்னர்களும் அவர்களைப் போலவே விடுதலைப் பேரார்வம் கொண்டு குமுறினார்கள். ஒரு சிலர், பதுங்கிப் பாயக் காத்திருந்தனர். சிலர் வெளிப்படையாய் எதிர்த்தனர். ஒற்றுமை மட்டும் இருந்திருக்குமானால், பல மன்னர்களையும் பெருமக்களையும் கோழைத்தனமும், உட்பகையும், எதிரிகளின் கையாட்களாக்காதிருந்திருந்தால், இந்தியா அடிமைத் தளையை வீசி எறிய இத்தனை நீண்ட காலம் காத்திருக்க வேண்டுவ தில்லை; அத்தளை ஏறும்போதே அதனை உதறித்தள்ளி யிருக்கலாம்.

தம் அரசு கடந்து மாநில விடுதலைக் குறிக்கோ

மனக்கண் முன்வைத்துப் போராடிய அரசர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள், மைசூர் அரசர் ஹைதர் அலியும், திப்புவும், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனு மேயாவார்கள்.

மைசூர்ப் போர்கள்

மைசூர் அரசர் மைசூருக்காகப் போராடவில்லை என்பதை மைசூர்ப் போர்கள் நன்கு விளக்குகின்றன. ஹைதர் அலி பிரிட்டிஷார் ஆண்ட இடங்களையும் அவர்களை ஆதரித்த அடிமை அரசர்கள் நாடுகளையும் புயல் வேகத்தில் சூறையாடினான்; சென்னைக் கோட்டையையே தகர்த்து, பிரிட்டிஷார் இறுமாப்பைக் குலைத்தான். இவ்வெற்றிகளின் மூலம் அவன் ஒரு சுதந்தர அரசனாய் இருந்து பிரிட்டிஷாரிடம் சுதந்தர ஒப்பந்தம் செய்து கொண்டான்.