இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
69
மேலை உலகில் இடைக்கால நிலப்பண்ணையாட்சியின் அரையிருளில் ஆழ்ந்திருந்த ஐரோப்பாவைத் தட்டி எழுப்பிற்று. பின்னது, கீழ் நாடுகளில் சிறப்பாகத் தென் கிழக்காசியாவில், நிலவியிருந்த அடிமைத் தூக்கத்தை அகற்றும் முதல் குரலாயமைந்தது. இந்திய மாநிலத்தில் அஃது ஒருபுறம் புரட்சிக்கனலை எழுப்பிற்று; மற்றொருபுறம், ஆட்சியாளர் அவநம்பிக்கையையும் அடக்கு முறையையும் தொடங்கக் காரணமாயிருந்தது. விடுதலைப் பேரியக்கத்தின் முன்னணிக் கொடியேற்றமாயும், முன்னணி முரசொலியாயும் அது அமைந்தது.
விடுதலை இயக்கம் 1798ல் தொடங்கி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதன் போராட்டப் பெரும்படி 1947-ஆம் ஆண்டுடன் முடிவு பெற்றுவிட்டது.இந்தப் படியில் நிகழ்ந்த போராட்டங்கள் மிகப்பல. ஆனால் மற்ற எந்தப் போராட்டத்தையும் விட மக்கள் உள்ளத்தில் தழும்பேறிய போராட்டம் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டமே. அதன் வீரம், மக்கள் கற்பனை எல்லையைத் தாண்டிற்று. ‘அது தெய்விக ஆற்றல் உடையது’ என்று இன்றும் தமிழக மக்கள் நம்புகின்றார்கள். மக்கள் வீரத்தை அவர்கள் மண்ணின் ஆற்றல் என்று கருதுகிறார்கள்.
வேட்டையில் மருண்டோடும் முயல் பாஞ்சாலங்குறிச்சி எல்லையில் கால் வைத்தால், புதுவீரம் பெற்று எதிர்த்து நின்று, மாளும் வரைப் போராடும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, வேட்டை நாய் வளர்ப்போர், பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரப் போர் செய்துமாண்ட திடலிலிருந்து சிறிது மண்ணெடுத்து வந்து அதன்மீது புதிய வேட்டை நாய்களைப் பிறக்கச் செய்வராம்- பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் வீரம் அவற்றின் பிறப்பிலேயே படிவதற்காக!
போராட்டம்
பாஞ்சாலங்குறிச்சிப் மற்றப் போராட்டங்களைப்போல அயலாட்சிக் காலத்திற்கூட மக்கள் உள்ளத்திலிருந்து மறைக்கப்பட முடியவில்லை. மக்கள் அப்போர் வரலாற்றை ஒரு வீர காவியமாக்கினார்கள். பாரத இராமாயணங் களைப்போல, அது ஏட்டில் அடைபட்ட காவியமாய் விளங்கவில்லை; தெருப்பாடகர் வாய்ப்பாடலாகவும், வழிவழி