பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

||-

அப்பாத்துரையம் - 12

மரபாக வந்த நாட்டுப் பாடலாகவும், தெருக்கூத்து நாடகமாகவும் இன்றும் தமிழ் நாடெங்கும் அது பாடப்படுகிறது. மக்கள் வீர உணர்ச்சிக்கும் கலை உணர்ச்சிக்கும் சான்றாய் இன்றும் அது மக்களால் நுகரப்படுகிறது. புகைவண்டி நிலையங்களிலும், பொறி வண்டிகள் நிற்குமிடங்களிலும், கூனரும், கிழவரும், நொண்டிகளும் கந்தலாடைச் சிறுமிகளும் அதைப் பாடுவதை நாம் இன்றும் கேட்கலாம்.

1857 வட டநாட்டில் புரட்சி

வடநாட்டுக்கு, வடநாட்டு முதல் விடுதலைப் போராட்டம் எப்படியோ, அப்படித் தென்னாட்டுக்குப் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் அமைந்திருந்தது. நாட்டு மன்னர் வரலாறு இதனைத் தெளிவாகக் காட்டும். வடநாட்டுப் பெரும்போரில் பிரிட்டிஷாரை எதிர்த்த மரபுகள் அழிவுற்றன. புரட்சியில் ஒதுங்கியிருந்த சிலரும், புரட்சிக்காரருக்கெதிராய் இருந்த சிலருமே மன்னர் மரபின் சின்னங்களாய் அணிமை வரை விளங்கியுள்ளனர். அதுபோலத் தென்னாட்டிலும் பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்தில் பங்கு கொண்ட மன்னர், பெருங்குடி மக்கள் மரபுகள் யாவும் அழிவுற்றன. அப்பெருவீரனைக்காட்டிக் கொடுத்தவரும், அவனை எதிர்த்து அயலாட்சியின் செல்லப் பிள்ளைகளாய் இருந்தவருமே அணிமைக் காலம் வரை நாட்டு மன்னரின் எஞ்சிய மரபினராயிருந்து வந்துள்ளனர்.

காட்டாத

வடநாட்டுப் பெருமன்னர்களுக்கும் சலுகைகளைப் பிரிட்டிஷ் அரசியலார் பாஞ்சாலங்குறிச்சி வீரரைக் காட்டிக் கொடுத்த மரபுகளுக்குக் காட்டியுள்ளனர். புதுக்கோட்டை அரசுக்குக் கப்பமில்லா உரிமையும், தனி நாணய உரிமையும் தரப்பட்டிருந்தன. திருவாங்கூர், கொச்சி அரசுகள் பாஞ்சாலங்குறிச்சிக்கெதிராகவும் திப்புவுக்கெதிராகவும் உழைத்தன. இவற்றுக்குத் தனித்தனி நாணய உரிமையும், தனித்தனி அஞ்சல் நிலைய உரிமையும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அளவில் தென்னாட்டுப் புரட்சி சிறியதாயினும், காரத்தில் பெரியது என்றே ஆட்சியாளர் கருதியிருந்தனர் என்பதை இது காட்டுகிறது.