பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

71

திப்புவின் போராட்டம் மன்னன் நடத்திய தேசப் போராட்டம். ஆனால், பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் மன்னன் தலைமையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி மண்ணுக்காகப் போராடவில்லை; அதை மீட்டும், மீட்டும் இழந்த பின்னும் போராடினார்கள்; வெற்றி கிட்டாது என்று தெரிந்த பின்னும் அதைத் தமிழகத்தின் போராட்டமாக்க முயன்றார்கள். அவர்கள் தங்கள் உயிருக்காகப் போராடவில்லை; இறுதி மனிதன் மூச்சு இருக்கும்வரை போராடி னார்கள். எவரும் தூக்குமேடையினருகிற்கூட உயிருக்காக எதிரியிடம் மன்றாடவில்லை. அவர்கள் போராடியது நாட்டின் உரிமைக்காக, தன்னாட்சியுரிமையுடைய நிலத்தில் வரி காடுப்பது நிலத்தின் உரிமையை விற்பதாகும் என்று அவர்கள் கருதினார்கள்.

66

'வானம் பொழியுது, பூமி விளையுது! மன்னவன் காணிக்கு ஏது திறை?”

என்ற வீரபாண்டியக் கட்டபொம்மனின் கேள்வியே பாஞ்சாலங்குறிச்சிப் போர் வீரர் போர்க்குரலாயிற்று. அது இந்தியாவின் முதல் வரி கொடாப் போராட்டம்; ஆனால், அஃது உயிரை மறுத்த வரி கொடாப் போராட்டமாயமைந்தது.

ஒரே மாநிலம்

1857-ஆம் ஆண்டு வடவிந்தியப் புரட்சிக்கு 1806-ஆம் ஆண்டு வேலூர்க் கிளர்ச்சி அடிகோலியாயிருந்தது. அது போலவே,1806- ஆம் ஆண்ட வேலூர் கிளர்ச்சிக்கு, அதற்கு ஒரு சில ஆண்டு களுக்கு முன்பு அருகே நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் காரணமாயிருந்தது. இதுபற்றித் தமிழரசுக் கழகத்தின் தலைவர் திரு.ம.பொ. சிவஞானம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"இந்திய சுதந்தரப் புரட்சியை விரிவாக எழுதிய வீரசவர்க்காரும் வடக்கே சிப்பாய்கள் செய்த புரட்சியைத்தான் சுதந்தரப்போரின் தொடக்கமாகக் குறிப்பிடுகிறார்: அந்தச் சுதந்தர யுத்தத்திற்கு 1806-ஆம் ஆண்டில் தெற்கே வேலூரில் நடந்த சிப்பாய்களின் புரட்சியே ஒத்திகையாய் இருந்ததென்றும் கூறுகிறார். உண்மை என்னவென்றால், பாஞ்சாலங்குறிச்சியில்