பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 12

தொடங்கிய விடுதலைப் போரின் அடுத்த கட்டந்தான் வேலூர்ச் சிப்பாய் புரட்சி. இந்த இரண்டும் நடந்து ஓய்ந்த அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1857லேதான் வடக்கே சிப்பாய் புரட்சி நடைபெற்றது.

து:

திரு.சிவஞானம் விடுதலை இயக்கம் பற்றிக் கண்ட முடிவு

66

இந்திய விடுதலைப் போரின் வரலாறு, பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் நடத்திய வீரப் போரிலிருந்துதான் தொடங்குகின்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், பாஞ்சாலங் குறிச்சிப் போரைப் பற்றிய செய்திகளை வேங்கடத்துக்கு வெளியேயுள்ள இந்தியருள் எவரும் அறிந்திலர்."

இந்தியாவை ஒரு இந்தியாவாகக் கொள்ளும் மனப்பான்மை குன்றிவிட்டகாரணத்தாலேதான் இந்திய வரலாற்றாசிரியர் பலர் கண்கள் விந்திய மலைக்கு இப்பால் செல்வதில்லை. வேலூர் ரையிற் பார்வையை எட்டவிட்ட முதல் தேசீயவாதி வீரசவர்க்காரே என்னல் வேண்டும்.

வீரபாண்டியர் மரபு

தமிழ் நாட்டில் மட்டுமன்றி, தென்னாடு முழுவதுமே பெருநிலக்கிழமைகள் ‘பாளையங்கள்' என்று வழங்கப்படு கின்றன. ‘பாளையங்கள்' என்ற சொல்லுக்குப் ‘படைவீடுகள்’ என்பது பொருள். இவற்றில் கோட்டைகளும் கொத்தளங்களும் இருந்தன. இவற்றின் குடிகள் அமைதிக் காலத்தில் வேளாளராயும் பிறவகைத் தாளாளர் (தொழிலாளர்) ஆயும் இருந்தனர்.ஆனால் போர்க்காலத்தில் இவர்களே வீரர்களாய்ப் படைக்கலந் தாங்கித் தங்கள் பாளையக்காரர் அல்லது பாளையத்தலைவர் தலைமையில் அரசருக்குப் போரில் உதவியாகச் செல்வார்கள். இம்முறை உண்மையில் இடைக்காலத்தில் உலகில் ஏற்பட்ட நிலப்பண்ணை முறையின் சின்னமே. ஆனால், இஃது ஓர் அரசியல் முறையாக வகுக்கப்பட்டது விஜயநகர ஆட்சியிலே தான்.

விஜயநகரப் பேரரசின் பாளையங்களே இன்று வரை பாளையங்கள், பெருநிலக் கிழமைகளாய் நிலவி வருகின்றன.