இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
73
ஆனால், அவற்றுள் பாஞ்சாலங்குறிச்சி முனைப்பாகக் காணப்படவில்லை. விஜயநகரப் பேரரசு அழிவுற்ற பின்னரே அது பாளையங்களுள் ஒன்றாய் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயினும், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தார் தமது மரபைப் பண்டைப் பாண்டிய மரபுடனும் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிக்கட்டபொம்மனுடனும் தொடர்புபடுத்திக்கொள்கின்றனர். உண்மையில் பாஞ்சாலங்குறிச்சி மரபு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பெல்லாரி மாவட்டத்திலிருந்து வந்து குடியேறிய ஓர் ஆந்திர மரபே என்று கொள்ளத்தகும், நீண்ட நாள் தமிழகத்தில் தங்கி, தமிழ் மறவருடன் கலந்து உறவாடி அவர்கள் முற்றிலும் தமிழராயிருக்க வேண்டும்.
ஆதிக்கட்டபொம்மன்,பண்டைப் பாண்டியர் மரபில் வந்த ஒரு சிற்றரசனிடம் தளபதியாய் இருந்தான். அச்சிற்றரசன், ‘வீரபாண்டியன்' என்ற பெயருடன், ‘அழகிய வீரபாண்டிய புரம்' என்ற நகரிலிருந்து ஆட்சி செலுத்தினான். அவன் கட் பொம்மனிடம் பற்றுக்கொண்டு, அவனையே உரிமை மகனாக்கினான். இந்நேய உறவுக்குச் சான்றாகவே பாஞ்சாலங் குறிச்சி வீரர் மாறிமாறிக் கட்டபொம்மன், வீரபாண்டியன் என்ற பெயரைச் சிறப்புப் பெயராகவும், இரண்டு பெயரையும் பொதுப் பெயராகவும் கொண்டிருந்தனர். அதாவது, வீரபாண்டியக் கட்டபொம்மன் எனவும், அவன் மகன் கட்டபொம்ம வீரபாண்டியன் எனவும் அவர்கள் வழங்கப்பட்டார்கள்.
ஆதிக் கட்டபொம்மன்,தன் முன்னோன் ஒருவன் பெயரால் பாஞ்சாலங்குறிச்சி என்ற கோட்டையைக் கட்டி அதில் ஆண்டான் என்பது கூறப்படுகிறது.பாஞ்சாலங்குறிச்சி என்பது 'பஞ்சவன் குறிச்சி' என்ற பெயரின் மரூஉவாய் இருக்கவும் கூடும். ஏனெனில், ‘பஞ்சவன்' என்பது பாண்டிய மரபினர் பெயர்களுள் ஒன்று.
வீரபாண்டியக் கட்டபொம்மன் 1790-ஆம் ஆண்டில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் உரிமையைப் பெற்றான். அப்போது அவனுக்கு வயது முப்பது. சிவத்தையா, ஊமைத்துரை என்ற இரு மைந்தரும், சுந்தரவடிவு, ஞானமுத்து என்ற இரு மகளிரும் அவன் உடன்பிறந்தவர். கட்டபொம்மன் மட்டுமன்றி, அவன் உடன் உடன்பிறந்தவர்களும் பாஞ்சாலங்