74
அப்பாத்துரையம் - 12
குறிச்சிப் போரில் பெரும்பங்கு கொண்டிருந்தார்கள்.
தமிழக உரிமை மரபு
பிரிட்டிஷ் ஆட்சி அன்று முடியாட்சியாய் இருக்கவில்லை. பிரிட்டிஷ் முடியரசு, 1857-க்குப் பின்னரே இந்திய ஆட்சியை நேரடியாக ஏற்க முனைந்தது. அதற்குமுன் வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகமே, வாணிக வாய்ப்புக்காக ஆட்சியைச் சிறிது சிறிதாக இந்திய மன்னரிடமிருந்து கைப்பற்றியிருந்தது.
தமிழகம் அதுவரை எந்த வேற்று நாட்டாருக்கும் அடிமைப்பட்டிருந்ததில்லை. அரியநாத முதலியார் என்ற தமிழமைச்சர் உதவியால் பாண்டியர் சோழர் பூசலைச் சாக்கிட்டு விஜய நகரப் பேரரசர் தமிழகத்தைக் காப்பாற்றியதுண்டு. ஆனால், அப்பேரரசர் தெலுங்கு கன்னட மரபினரே. அதன் பின் தமிழ்நாட்டிலேயே பல மரபினர் ஆங்காங்கே ஆண்டதன்றி, அயல்நாட்டவர் ஆட்சி நிலவவில்லை. இத்தகைய ஆட்சி யாளருள் ஒருவர் கர்நாடக நவாபு. பெயரளவில் தமிழகத்தில் இருந்தது, மேலுரிமைப் பாதுகாப்புக்கான உரிமையே. அவ்வப்போது மன்னர் சிலர் போரில் உதவுவர். ஆனால், அவர்கள் மேலுரிமை ஏற்ற- ஆயுதம் தாங்கிய உரிமை மன்னர்களே.
பிரிட்டிஷ் வாணிகக் கழகம் அடிக்கடி மன்னர்களைப் பிரித்தாண்டும், உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டுத் தன் கையாட்களை மன்னராக்கியும் அரச மரபுகளை வசப்படுத்தி வந்தது; சில சமயம் வட்டித் தொழிலாளர் முறைப்படி கடன் கொடுத்து, மன்னர்களின் வீண் செலவுகளை ஊக்கிக் கடனைப் பெருக்கி, அதன் மூலம் அவர்கள் உரிமைகளைக் கைப்பற்றியது. இங்ஙனம் கடன் கொடுத்துக் கைப்பற்றிய அரசுகளில் கருநாடக அரசும் ஒன்று. 1790ல் இவ்வகையில் பெயரளவான அதன் மேலுரிமையைக் கைப்பற்றி, அதைச் சாக்கிட்டுத் தமிழக ஆட்சி முழுவதும் தனதாக்க அக்கழகம் முனைந்தது.
பெயரளவான உரிமையை உண்மையான உரிமையாக்க நாட்டு மன்னர்களாலேயே முடிவதில்லை. அஃது, உண்மையில்