இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
75
ஆதிக்கப் போட்டிப் போருக்கான ஓர் அறைகூவலாய் மட்டுமேயிருந்தது. அயல்நாட்டு வாணிகக் குழு ஒன்று அதைச் செயற்படுத்தி வரிவிதிப்பது என்பது எப்போதுமே முடியாத காரியம். ஆனால், இதைப் பிரிட்டிஷார் நேரடியாகப் பிரிக்க எண்ணவில்லை; நாட்டு மன்னர், பெருமக்கள் மரபினரின் இயற்கைப் பூசலைப் பயன்படுத்தி, ஒருவர்மீது ஒருவரை ஏவ இதை ஒரு கருவியாகவே கொண்டனர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துடன் அடிக்கடி போட்டிப்பூசலிட்ட மரபுகளுள் எட்டயபுரமும் ஒன்று. தவிர, அரியநாதமுதலியார் மரபில் வந்த தளவாய் முதலியார் போன்ற பெருமக்கள் இவ்வுரிமையைப் பெற்று வரியும் திறையும் பிரிக்கும் குத்தகையை ஏற்க முன்வந்தனர். இவ்விரு வகைத் தாக்குதலுக்கும் பாளையக்காரர்களும் குடிமக்களும் உட்பட்டார்கள்.
உரிமைப் போராட்டம்
பாளையக்காரர் எவரும் எளிதில் திறை கொடுத்து விடுவதில்லை. பல சமயம் அரசியல் பேச்சு அச்சுறுத்தல் ஆகியவற்றாலும், சில சமயம் படைப்பலத்தாலுமே திறை பிரிக்க வேண்டியிருக்கும். நாட்டின் குழப்பமான நிலையில் பலர் அதைக் கடத்துவதும் கொடுக்க மறுப்பதும் இயல்பு. ஆனால், பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டியன் திறை கொடுக்க முடியாது என்று இறுமாந்து கூறினான்.
66
'வானம் பொழியுது, பூமி விளையுது! மன்னவன் காணிக்கு ஏது திறை?”
என்ற கேள்வியை எழுப்பியவன் அவனே. இது பாளையத்தார் பலருக்கு ஊக்கம் தந்தது. வரியும் திறையும் திரட்டும் வேலை அயலின ஆதிக்கக் காரர்களுக்குத் தலையிடியாயிற்று.
சூழ்ச்சிகளில் வல்ல வெள்ளை வணிக ஆட்சிக் குழு, பாஞ்சாலங்குறிச்சிமீது எட்டயபுரத்தை ஏவிவிட ஒரு சூழ்ச்சி செய்தது; பாஞ்சாலங்குறிச்சிக்குரிய சில நகரங்களை எட்டய புரத்தாருக்கு உரிமையாக வழங்கிற்று. ஆனால், எட்டயபுரத்தார் அதைக் கைப்பற்ற முடியவில்லை. அது புலிப்பல் தானமாயிற்று. எட்டயபுரத்தாரின் ஏலமாட்டாக் கோபம் பிரிட்டிஷாரின் முதல் துரோகப்பயிரின் விதைப்பண்ணை யாயிற்று.