பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 12

1792-இல் தொடங்கிய இந்த வரிச்சச்சரவே பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. இந்தியாவை ஆளவந்த பேரரசுக்கும் இந்தியாவில் தமிழகத்தின் மூலையில் மக்களாட்சி நடத்திய ஒரு பெருநிலக் கிழமைக்கும் போர் மூண்டது!

பண்டு தமிழகத்தில் சினங்கொண்டெழுந்த ஒரு கோழி, ஒரு யானையை எதிர்த்துப் போர் செய்ததாக ஒரு கதை உண்டு. அப்போர் நடந்த இடமே கோழியூர். அதாவது உறையூர் (இக்காலத் திருச்சிராப்பள்ளி) என்பது கூறப்படுகிறது. பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் இப்பழங்கதையை நினைவூட்டத்தக்கது. இதில் யானைதான் வென்றது; கோழி அழிந்துபட்டது. இது இயல்பே, ஆனால், யானை ஆறாண்டு தன் முழுத்திறமும் பயன்படுத்தி, கோழியின் குருதியுடன் தன் குருதியும் ஓடவிட்டுத் தான் வெற்றி காண முடிந்தது. அப்படியும் கோழியையும் கோழியின் மரபையும் ஒடுக்க முடிந்ததே தவிர, அதை அடக்கவோ அதன் மரபை ஒடுக்கவோ முடிந்ததில்லை.

உடல் மரபு அழிந்த பின்னும் உயிர்மரபு நிலவுகின்றது. சிறுநிலமரபு அடக்கப்பட்ட பின்னும், பெருநிலமரபு, மாநிலமரபு போரைக் கைக்கொண்டது. அம்மாநிலமரபு இன்று வெற்றி கொண்டுள்ளது.

1798-ஆம் ஆண்டு வரித்தலைவனான ஜாக்ஸன் தன்னை வந்து காணும்படி வீரபாண்டியனுக்குத் திருமுகம் விடுத்தான். பல தவணைகளுக்குப் பின் போவதென்று துணிந்தான் பாண்டியன். ஆனால், பாண்டியன் தன் வீர மரபின் பெருமை காக்கவே வரத் தயங்குகிறான் என்பதையறிந்த வெள்ளையன் ஜாக்ஸன், தன் ஆதிக்க மரபின் பெருமைகாக்க எண்ணி, நேரில் பார்க்கவிடாமல், அடிக்கடி இடமாறினான்.வீரபாண்டியன் பல இடங்களில் சுற்றி வேட்டையாடி இறுதியில் அவனை இராமநாத புரத்திற்

கண்டான்.

வீரபாண்டியன் சரிசம உரிமையுடன் பேசுவதும் வரி கொடுக்க மறுத்து நேச உறவு மட்டுமே நாடுவதும் ஜாக்ஸனின் சீற்றத்தைக் கிளறின. அவன் மன்னன் வீரபாண்டியக் சிறைபிடிக்க உத்தரவிட்டான்.

கட்டபொம்மனைச்