பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

77

வீரபாண்டியன் வெளியேற முயன்றான். எனினும், மறைவிலிருந்த வெள்ளையர் ஆட்கள் அவனைப் பிடிக்க முயன்று, அவனைச் சூழ்ந்தார்கள். ஆனால், சிங்கத்தைச் சூழ்ந்து பிடிக்கும் ஆட்டு மந்தைபோல, அவர்கள் சிதறினார்கள்! வீரபாண்டியன் வாள் அவர்களைத் துண்டு துண்டாக்கிற்று!

துணைத்தளபதியான கிளார்க்கு என்பவன் இப்போரில் மாண்டான் பாண்டியன் பக்கம் புரட்சி வீரனான வெள்ளையத் தேவன் நின்று போரிட்டான். இவனே நாட்டுப் பாடல்களில் ‘பாதர் வெள்ளை' என்று வழங்கப்படுகிறான்.

இராமநாதபுரத்திலிருந்து பாண்டியனும் அவன் வீரரும் தப்பி வந்தனர். ஆனால், பாண்டியன் அமைச்சர் மட்டும் சிறைப்பட்டனர்.

வீரபாண்டியனுக்கு டேவிட்சன் என்ற ஒரு வெள்ளையன் நண்பனாயிருந்தான். அவன் பரிந்துரைமீது சமரசம் ஏற்பட்டது.

சிங்கம் வெகுண்டது

ஆனால், ஜாக்ஸனுக்குப்பின் வந்த வெள்ளையர் தலைவர் லூஷிங்டன் என்பவனும் ஆதிக்கத் தோரணையை விடவில்லை. மீண்டும் 1799-இல் சச்சரவு மூண்டது. இத்தடவை தென்தமிழக மெங்கும் பாளையங்கள் கிளர்ந்தெழுந்தன. வீரபாண்டியனே கிளர்ச்சித் தலைவன் என்றறிந்து சென்னை ஆட்சித் தலைவரான எட்வர்டு கிளைவ் பெருமகனார் மேஜர் பானர்மென் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். இவரே பிரிட்டிஷ் பேரரசுக்கு அடிகோலிய இராபர்ட்டுக் கிளைவின் மகனார்.

பாளையக்காரருட் பலர் தம் குலதெய்வமாகிய சக்கம்மாள் விழாவை ஒட்டித் திருச்செந்தூருக்குச் சென்றிருந்தனர். அச்சமயம் பார்த்து மேஜர் பானர்மென் லெப்டினண்டு டல்ஹாஸ் என்பவனைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்க அனுப்பினான். கோட்டை சிறிது; படை பெரிது. ஆதலால், வீரபாண் சரண் புகுவான் என்று வெள்ளையர் நினைத்தனர். ஆனால், அவன் வணங்காமுடி மன்னனாய் நின்று எதிர்த்தான். பீரங்கிகள் முழங்கின. கோட்டை வாயில்கள் தகர்க்கப்பட்டன. வெள்ளையர் உள்ளே புக முயன்றனர்.

டியன்