78
அப்பாத்துரையம் - 12
இச்சமயம் மயிர்க்கூச்சிட வைக்கும் வீர நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது; படையின் துணைத் தலைவன் லெப்டினண்டு காலின்ஸ் உள்ளே நுழைந்தான். அவனைத் தமிழ்ப் பாடல்கள் 'காலன் துரை' என்று வழங்கின. நுழையும்போது ஓர் ஈட்டி அவன் மார்பிற்புகுந்து முதுகு வழியாய்ப் பாய்ந்து சென்றது. அவ்வீட்டியைச் செலுத்தியவன், வீரன் பாதர் வெள்ளையே.
பாதர் வெள்ளையின் குடும்பம் அவன் வீரத்தால் புகழ் பெற்றது; அனால், அவனைக் காட்டிக் கொடுத்த கறையும் அதற்கே உரியது. பணத்திற்காக அவன் மாமனே அவனைக் காட்டிக் கொடுத்தான். வெள்ளையர் கையால் வீரன் பாதர் வெள்ளை தூக்கிலிடப்பட்டான்.
காலன் துரையின் கதியே உள்ளே நுழையும் ஒவ்வொருவர் கதியும் ஆயிற்று. உள்ளே வெள்ளையர் பிணக்குவியல்கள்! அதையறியாமல் ‘காலன்' வழியில் வெள்ளைப்படை வீரர் வெள்ளாடுகள் போல வரிசையாய்ச் சென்று மாண்டார்.
'கோட்டையைத் தகர்ப்பது எளிது; அதில் நுழைவது அரிது' என்பதை வெள்ளையர் உணர்ந்தனர்.
போரை நிறுத்திப் பிணங்களை அகற்ற இணக்கங்கோரினர் வெள்ளையர். தூய தோலா வீரராகிய தமிழர்,அதற்கு இணங்கியதுடன், தாமே உதவி செய்தும் பிணங்களை அகற்றினர்.
'இவ்வீர நாட்டை அடிமைப்படுத்துகிறோமே!' என்று பல வெள்ளையர் உள்ளங்கள் அன்று துடித்தன.
கோட்டை விழுந்தது. ஆனால், கோட்டையின் சிங்கம் இரவே தப்பி அப்பாற் சென்றிருந்தது.
வஞ்சக வலை: வீழ்ச்சி
பாஞ்சாலங்குறிச்சிக்கான போர் முடிந்தது. தமிழகத்துக் கான போர்-மாநிலத்தின் உரிமைக்கான போர்-தொடங்கிற்று.
வீரபாண்டியனைத் தேடிப்பிடிக்கும் முயற்சியில் எட்டயபுர மன்னன் எட்டப்பன் உதவினான்.காட்டானையை வசப்படுத்திப் பிடிக்கும் நாட்டானையாய் அவன் விளங்கினான். அவன் புலம் விசாரித்து வேட்டையாடினான். பாண்டியன் தன் நண்பர்