பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

79

ஆட்சி தொடங்கும் சமயத்தில் அப்பேரரசின் ஐம்பெரு மாகாணங்கள் தனித் தனி ஐந்து இஸ்லாமிய வடதிசை அரசுகள் ஆயின. மைய அரசுப் பகுதியாகிய பேராரை இமத்ஷாஹீ மரபினரும், பீடாரைப் பாரித்ஷாஹீ மரபினரும், அகமது நகரை நிஜாம் ஷாஹீ மரபினரும், தென்கோடியில் மேல்திசையில் பீஜம்பூரை ஆதில்ஷாஹீ மரபினரும், மேல்திசை கோல் கொண்டாவை குத்ப்ஷாஹீ மரபினரும் ஆளத்தொடங்கினர்.

ஐந்தாகப் பிரிவுற்ற பின்னரும் தென்னக இஸ்லாமிய அரசுகள் முற்றிலும் வலி குன்றிப்போய் விடவில்லை. தென்னகப் புயலின் பின் நான்காம் விசயநகர மரபின் ஆட்சிக்காலத்தில் வடக்கே அகமது நகரும் தெற்கே பீசப்பூரும் கோல்கொண்டாவும் விசயநகர் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளர்ந்தன. ஆனால் தவளையை விழுங்கும் முன் பாம்பு கருடனுக்கு இரையானால் போல், புதிய வடதிசை முகலாயப் பேரரசனான ஔரங்க சீப்பினால் அவர்களும், தென்னகத் தேசீய ஆற்றலால் அவ் வடதிசைப் பேரரசும் வீழ்ச்சியுற்றழிந்தன.

வஞ்சிக்கும் வஞ்சனைக்கும் வன்செயற்கும் அஞ்சாத நெஞ்சுரமும் நேய அறிவு நிறை அன்பாற்றல், நஞ்சுக்கு நஞ்சாகும் நல்லமுதப் பொங்கல் வளம் எஞ்சாத தென்னகத்தின் ஈடில் அறம் வாழியவே!

முதலாம் அரிகரன்

முதலாம் அரிகரன் ஆட்சியும் (1336-1357), அவன் இளவல் முதலாம் புக்கன் ஆட்சியும் (1344-1379) கிட்டத்தட்ட ஒரே இணையாட்சியாகவே தொடர்ந்தன. வெற்றித் திருநகரின் நிறுவனத்திலும் பேரரசு நிறுவனத்திலும் அவன் சரிசமப் பங்கு கொண்டதுடன் ஆட்சித் தொடக்கத்திலிருந்தே தன் தமையன் கீழிருந்து கடப்பை, நெல்லூர் உள்ளடக்கிய கீழை மாகாணத்தின் மண்டல ஆட்சித் தலைவனாகவும் இருந்தான். அத்துடன் தன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே அரிகரன் அவனுக்கு 1344இல்

ல்

ளவரசு உரிமை அளித்திருந்தான். அவன் ஆட்சி குறிக்கும் ஆதாரங்கள் இதனால் அவ்வாண்டிலிருந்தே தொடங்கின. பேரரசின் போர்களை முன்னின்று நடத்திப் பேரரசின்