80
அப்பாத்துரையம் – 13
எல்லையை விரிவுபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டவன் அவனே.
அரிகரன் ஆட்சி தொடக்கத்தில் பேரரசு காம்பிலி அரசன் ஆண்ட பகுதியையும், ஒய்சளப் பேரரசின் வட எல்லையையுமே உட்கொண்டிருந்தது. இவற்றை அவன் ஒய்சளப் பேரரசின் ஆட்சியின் ஒரு மாகாணமாகவே ஆளத்தொடங்கியிருந்தான் என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் தனியரசனுக்குரிய சிறப்பு அவனுக்குத் தொடக்கத்திலிருந்தே கல்வெட்டாதாரங்களில் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அரசன் என்ற பெயர் உடனடியாக வழங்கப் பெறாமல் மகாமண்டலேசுவரன் என்ற பட்டமே கையாளப்பட்டிருந்தது. ஆயினும் அவன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே அவன் தனியரசனாக மட்டுமல்ல, தனிப் பேரரசனாகவும் வளர்ந்து விட்டான்.
1336-க்கும் 1343-க்கும் இடைப்பட்ட ஏழாண்டுகளுக்குள் ஒய்சளப் பேரரசின் வட எல்லையில் மட்டுமன்றி அப்பேரரசெல்லை முழுவதிலுமே படிப்படியாக அவன் ஆட்சி பரவுவது காண்கிறோம். ஏனெனில் இவ்வாண்டுகளுக்கிடையே இரு ஆட்சிகளுக்குமுரிய கல்வெட்டுக்கள் விரவியும், வர வர ஒய்சளக் கல்வெட்டுக்கள் அருகியும், விசயநகரக் கலவெட்டுக்கள் பெருகியும் வந்தன. போரில்லாமலே ஒரு பேரரசு சரிவுற்றது. அதன் மக்கள் அதனுடன் தொடர்பு கொண்ட வேறொரு தலைமை நோக்கி மெல்ல தொடர்பு கொண்ட வேறொரு தலைமை நோக்கி மெல்ல இழைந்து பேரரசுத் தலைமை மாற்றும் நிலையையே இது காட்டுகின்றது.1340-இல் பழைய சாளுக்கியரின் தலைநகரான வாதாபி விசயநகரின் கைப்பட்டது.ஹோனாவரில் ஆண்ட சுல்தான் ஜலாலுதீன், கடற்படை வலிமையுடைய வனாயிருந்தால் மலையாளக்கரை முழுவதிலும் திறையும் மேலுரிமையும் கொண்டிருந்தான்.1242-லேயே அவன் விசயநகர மேலுரிமைக்கு ஆட்பட்டு விட்டதாக அந்நாளைய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இபின் பதூதா குறித்துள்ளார்.
துளுவநாட்டு வெற்றி உடன்பிறந்தார் ஐவரும் மாரப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.1345-க்கு முன்பு ஒய்சளப் பேரரசன் மேலாட்சியின் கீழிருந்த அப்பகுதி விசய நகர