வெற்றித் திருநகர்
81
மேலுரிமை ஏற்றது.வென்ற அப்பகுதி மீது மாரப்பனே மண்டல ஆட்சி செலுத்தி வந்தான்.
அரிகரன் ஆட்சியிறுதிக்குள் காம்பிலி அரசன் ஆண்ட பரப்புடன் ஒய்சளப் பேரரசின் பரப்பு, கொண்கானம் ஆகியவையும் தேவகிரி, வாரங்கல் ஆகிய வல்லரசுகளின் பரப்பில் ஒரு பகுதியும் விசயநகர ஆட்சி யெல்லைக்குட்பட்டு விட்டன. ‘துவார சமுத்திரத்தையும் அது போன்ற வேறு நூறு நகரங்களையும் பகைவரிடமிருந்து விடுவித்து (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என வள்ளுவன் வகுத்துக் கூறிய ஆறுடன் அரசனையும் சேர்த்து) அங்கங்களும் நிரம்பிய அரசாட்சியினை ஆண்டான்' என்றும், 'ஒய்சளர் ஆண்ட நிலவலய மேகலையைக் கைக்கொண்டு அதைத் தன் ஆட்சிக்குரிய மேகலை ஆக்கிக்கொண்டான்' என்றும் அரிகரன் வெற்றிகளை அந்நாளைய ஆதாரங்கள் பரவுகின்றன.
ஏழு
‘தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்பது பழமொழி. அரிகரன் வகையில் இது குறைவற்ற நிறை மெய்ம்மையாயிற்று. வேறெந்த அரசர் பேரரசரையும் விட அவன் பேரளவில் உடன் பிறந்த செல்வம் மிக்குடையவனாகத் திகழ்ந்தான். கடப்பை கர்நூல் பகுதிகளைப் புக்கனும், அவன் இளவரசனானபின் கம்பணனும் ஆண்டு, அப்பகுதிகளின் வெற்றிகட்கும் ஆட்சி வலிமைக்குள் தாமே பொறுப்பேற்றனர். கடம்பரை வெல்லும் பொறுப்பும் வென்ற பகுதிகளை ஆளும் பொறுப்பும் மாரப்பனிடம் விடப்பட்டிருந்தது. அவன் சந்திர குத்தியிலிருந்து அப்பகுதிகளை வெற்றிகரமாக ஆண்டான்.
தமிழகத் தேசீயத்தின் தூவானங்கள்
1346-க்குள் அரிகரன் ஆட்சிக்குட்பட்ட விசயநகரப் பேரரசு கடலிலிருந்து கடல்வரை தென்னகத்தின் அகலத்தைத் தாவி அளக்கும் ஒரு முழக்கோல்போல விரிவடைந்து விட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இதே போன்ற வளர்ச்சிப்படியைச் சேரப் பேரரசு அடைந்திருந்தது. அந்நாளைய சேரப் பேரரசன் பல்யானை செல்கெழுகுட்டுவன் தன் ஆட்சிமூலம் தென்னகத்துக்கு ஓர் அரைப்பட்டியிட்ட இந்த நிகழ்ச்சியைக் குறித்துக் காட்ட இரு கடல் நீர் முழுக்கு விழா