90
அப்பாத்துரையம் – 13
முன்னேறி நாடெங்கும் சூறையாடினான். வாரங்கல் அரசன் பணிந்து நூறாயிரம் பொன்னும் இருபத்தாறு யானைகளும் திறையாகக் கொடுத்துப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டான்.
போர் முடிந்தும் இருதிசையிலும் மனத்தாங்கல் மேலும் இருந்து கொண்டே வந்தது. 1362-ல் பகமனி அரசனிடம் செல்ல விருந்த குதிரைகளை வழியில் மடக்கி வினாயகதேவ் அவற்றை வாரங்கலுக்கே வலிந்து வாங்கிக் கொண்டான். இரண்டாவது தடவையும் பகமனிப் படைகள் வாரங்கலைத் தாக்கின. இத்தடவை வினாயகதேவ் எதிரி கைப்பட்டு உயிரிழந்தான். வாரங்கல் மீண்டும் சூறையாடப்பட்டது. ஆனால் இத்தடவை பகமனி வெற்றி பெற்றாலும் தானும் பெருத்த சீரழிவுக் காளாயிற்று.
பகமனி ஆட்சியில் எழுந்த ஓர் அரசியல் கிளர்ச்சி போர்ப் புயல் மீண்டும் கொதித்தெழக் காரணமாயிற்று. முகம்மதுவின் மைத்துனன் பெய்ராம்கான் தௌலதாபாத்தின் ஆட்சியாளனா யிருந்தான். அவன் முகம்மதுவுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தான். வாரங்கலும் விசயநகரமும் இப்போதும் தலையிட்டுக் கிளர்ச்சிக்கு ஆதரவு தந்தன. அத்துடன் தென்திசைப் புயலடக்க மீண்டும் வடதிசைப் புயலை வரவழைக்கவும் அவர்கள் திட்டமிட்டனர். தில்லியில் அப்போது முகம்மது துக்ளக்கின் பின்னுரிமையாளனாக பிரூஸ் துக்ளக் ஆட்சி செய்து வந்தான். தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தால், மீண்டும் இழந்த தேவகிரியைப் பெறலாம் என்று அவாத்தூண்டினர். அவனுக்குப் பரிசாக அளிக்க முத்து மணி வைரங்கள் இழைத்த ஒரு பொன் மயில் இருக்கையையும் அவர்கள் சித்தம் செய்து வைத்திருந்தனர். ஆனால் வடதிசைப் புயல் இப்போது பழைய புயலாக இல்லை. வடதிசையில் வாழ்வுக்கும் மாள்வுக்கும் இடையே அது ஊசலாடிக் கொண்டிருந்தது. பிரூஸ் தென்னகத்தின் குரல் கேளாச் செவியனாயிருந்து விட்டான்.
முகமது இப்போது ஒரு படையை தௌலதாபாத் கிளர்ச்சி யை அடக்க அனுப்பிவிட்டுத் தானே தெற்கே கிளம்பினான். வாரங்கல், கோல்கொண்டா ஆகிய இரு கோட்டைகளையும் தாக்கி நெருக்கினான். இந்த மூன்றாவது தடவையும் வாரங்கல்