பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

93

விடத் துணிகரமாக விசயநகரத்துடன் போராடினான். புக்கன் பின் வாங்கிக்கொண்டே தலைநகர் வரை அவனை உள்ளிழுத்துப் பின் அவனை எதிர்த்துத் தாக்கி வெற்றி கண்டான். ஆயினும் இரு பேரரசுகளும் இப்போது முற்றிலும் களைப்புற்றுத் துவண்டு போயிருந்தன. போர் இதனால் எளிதாக நிறுத்தப்பட்டு அமைதி ஏற்பட்டது.

தமிழக விடுதலைப் போராட்டம்

வடதிசைப் புயலை எதிர்த்த முதல் தென்றல் அலை, தமிழக விடுதலை இயக்கத்தின் முதற் பாதியில் கடைசி ஒய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் எழுப்பிய கிளர்ச்சியாகும். அது புயலைத் தடுத்துத் துடைத் தழிக்கவில்லை. ஆயினும் புயல் தடுத்தாளும் தென்றற் கோட்டையாகிய விசயநகரப் பேரரசைத் தென்னகத்தின் மையத்தில் படைத்துருவாக்க அது பெரிதும் உதவிற்று. புக்கன் ஆட்சிக்காலத்திலேயே இப்புதுத் தென்றல் தெற்கே தமிழகம் நோக்கி வீச வாய்ப்பு ஏற்பட்ட து.

புக்கன் கீழ் தமிழகத் திசையிலுள்ள தென் மாகாண மாண்டவன் அவன் புதல்வன் வீர கம்பணன். அவனிடம் கோபாலராயன், சாளுவமங்கு, சோமப்பன், கோவிந்தராசன், சோமப்பன் புதல்வனான மாரையன் ஆகிய ஒப்பற்ற சிறந்த படைத்தலைவர்கள் இருந்தார்கள். முன்பு ஒய்சளப் பேரரசன் வென்றடக்கிய தமிழகத்தின் வடகோடிப் பகுதி மட்டுமே இச்சமயம் விசயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. மீந்த பரப்பின் பெரும் பகுதியிலும் வேளிர் குடி மரபினனான சம்புவராயனே மிகவும் வலிமை வாய்ந்த ஆட்சியுடையவனாயிருந்தான். மதுரையும் சுற்றுப்புறங்களும் மட்டும் இஸ்லாமியரிடம் தங்கியிருந்தது. சம்புவராயன் தற்போது படை வீடு என்று அழைக்கப்படும் இடத்தில் இராச கம்பீரம் என்ற கோட்டையையே தலைமையிடமாகக் கொண்டிருந்தான்.

வீர கம்பணன் தமிழக ஆட்சிப் பொறுப்பாளனாக (1365- 1370) ஐந்தாண்டுகளே இருந்தான். தன் படைத் தலைவர்களின் ஒன்றுபட்டதுணையுடன் அவன் பல ஆண்டுகள் சம்புவராயனை எதிர்த்துப் போரிட்டான். பல களங்களில் அவனை முறியடித் தான். சோமப்பன் மகனான மாரையன் அவனைக் கைப்பற்றிக்