வெற்றித் திருநகர்
(101
புகுந்து பிரிவினை செய்யாத காலம் ஒன்று இருந்தது. அது அவ்வளவு நிலையான பிரிவினையுமல்ல, மிகப் பழம் பிரிவினையுமல்ல. இராமாயண காலத்திற்குப் பின்னரே அது ஏற்பட்டது. ஆனால் மலைத் தொடர்களோ தென்னகத்திலும் இலங்கையிலும் கடலூடாகவே புகுந்து இரு நிலங்களிலுமே நிலையான பிளவு செய்துள்ளன. இதன் தடங்களை நாம் இன்றளவும் காணலாம். தென்னகத்தில் மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள சோழபாண்டிய நாடுகள், இலங்கையில் முறையே கீழ்பகுதி, வடபகுதியுடனும் மலைத் தொடருக்கு மேற்கேயுள்ள மலையாளக்கரை இலங்கையில் தென்மேற்கு, தெற்குக் கரைகளுடனும் நிலம், செடியின உயிரினவளம், தட்பவெட்ப நிலை, பண்பாடு, மொழி, கலை ஆகிய எல்லாவற்றிலும் முறையே நெருங்கிய தொடர்பும் ஒற்றுமையும் உடையவையாயிருப்பது காணலாம். இவ்வேறுபாடுகளும் ஒற்றுமையும் இரண்டுமே தென்னிலங்கையும் தென்னகமும் இரு வேறு நிலங்களாவதற்கு முற்பட்ட வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் ஆகும்.
-
காவிரியின் பழய பெயர்களாகிய கங்கை அல்லது கொங்கை (கொங்கு - பொன்; பொன்விளையும் கொங்கு நாடு; கொங்கை கொங்கு நாட்டிலிருந்து பிறந்த பொன்னாறு), பொன்னி ஆகியவையும்; தென்னகத் தொண்டை நாட்டின் பழம் பெயராகிய அருவாநாடு என்பதும் ஈழத்தின் ஆறுகளின் பெயர்களில் பொதுவாகவும் பழந்தலை நகர்களில் ஒன்றான பொலன்னருவாவின் பெயரில் சிறப்பாகவும் இடம் பெறுகின்றன. வரலாற்றுக் காலத்தில் தென்னகத்தின் வடதிசையில் மைசூருக்கு வடபால் ஆண்ட கடம்பர் சங்ககாலத்தில் மலையாளக்கரையில் ஆண்டனர். தமிழகத்திலும் ஈழத்திலும் இவர்கள் தொடர்பும் இது போலப் பின்னாளில் வடதிசை யிலாண்ட வாணதிரையர், வாணாதிராயர் அல்லது வாணர், மாவலி ஆகியவர் மரபுத் தொடர்பும் காணப்படுகின்றன.
தமிழினமும் சரி, தமிழ் சார்ந்த பிற இனங்களும் சரி பொதுவாக ஈழத்தின் திசையிலிருந்தே தென்னகத்திற்கும் பிற வடதிசை மாநிலங்களும் பரவியுள்ளன என்பது இன்று மறக்கப் பட்ட, ஆனால் ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டிவருகிற, காட்ட இருக்கிற செய்தி ஆகும்.