பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

அப்பாத்துரையம் – 13

தமிழ் மரபுப்படி முத்தமிழ் முச்சங்க வாழ்வுகளில் தலைச் சங்ககால முழுவதும், ஓரளவு இடைச்சங்க காலத்திலும் இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியாக, இன்றைய தென்னகத்தை விட அன்றைய பாண்டிநாட்டின் தலைநகரான தென் மதுரைக்கு அருகாமையிலேயே இருந்திருந்தது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அந்நாளைய தமிழகப் பெரும் பேரரசன் நெடியோன் இமயம் வரையும் கடல்கடந்த கடாரம்வரையும் வென்றவனாயினும், இலங்கையை அவன் வெல்ல நேர்ந்ததில்லை. ஏனெனில் அது பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது.

கடைச்சங்க காலம் இராமாயணத்திற்குப் பிற்பட்ட காலமே. அதன் பழம் பேரரசன் கரிகாலன் இலங்கையை வென்றே வட இமயத்தில் புலிக்கொடி பொறித்து, மேருவைச் செண்டாலடித்து அதிலும் தன் கொடி பொறித்தான். இடைக் காலப் பாண்டியப் பேரரசர், சோழப் பேரரசர், பாண்டியப் பெரும் பேரரசர் நாட்களில் ஈழம் கிட்டத்தட்ட தமிழகத்தின் மூவரசுகளுடன் நான்காம் அரசாகவோ, இரண்ட ரண்டரசர்கள் ஆண்ட காலத்தில் நான்காம், ஐந்தாம் அரசாகவோதான் மூவரசுகளுடனும் அவற்றின் நட்புப் பகைச் சூழல்களுடனும் ஒரே தேசீய அரசியற் சுழலில் சுழன்று வந்தது.

விசயநகரப் பிறப்புக்குச் சற்று முன்னாகத் தமிழகத் தேசீயத்தில் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. தென்னகத் தமிழகம், தென்னிலங்கை ஆகியவற்றின் தொடர்பு வகையின் இது ஒரு திருப்பத்தை உண்டு பண்ணிற்று. ஈழ மன்னன் பெரும் பெயர்ப் பராக்கிரமபாகு இலங்கை முழுவதையும் முதன் முதலாக ஒரே குடைக் கீழ்க் கொண்டு வந்தான். ஆனால் அவனுக்குப் பின் தீவு பழையபடி இரு அரசுகளாகப் பிளவுற்றது. இரண்டு அரசுகளின் போராட்டங்களிலும் தென்னகத் தமிழ் வீரர் பலர் சென்று இருபுறமும் படைத் தலைவர்களாகவும், அமைச்சராகவும் ஒரேவொரு சமயம் அரசராகவும் பணியாற்றினர். சிங்கள அரசர்களின் முன்னோர்களில் ஒருவனே சிங்களவனாய்விட்ட இத்தகைய ஒரு தமிழ் வீரப் படைத் தலைவனாய் இருந்தான்.

விசய நகர காலத்தில் இலங்கையில் தென்கோடியில் சிங்கள அரசு ஒன்றும், வடக்கே யாழ்ப்பாண அரசு ஒன்றும் இருந்தது. யாழ்ப்பாண அரசே மேலுரிமை கொண்டதாய்