வெற்றித் திருநகர்
(103
இருந்தது. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் விசய நகரப் பேரரசர் அல்லது மதுரை நாயக அரசர்களுடனும், அவர்கள் சார்பில் படை நடத்திய சிற்றசராகிய பாண்டியருடனும் இந்த இலங்கையரசர் மோதிக் கொண்டனர். பண்டைத் தமிழகத் தேசீயத்தில் நிலவிய இலங்கை மரபின் தூவானத்தை இங்ஙனம் விசய நகர காலத்திலும் காண்கிறோம்.
இரண்டாம் அரிகரனின் மூத்த புதல்வனாகிய விரூபாக்கன் தந்தை தமிழ் மண்டலத் தலைவனாக இருந்த நாட்களிலேயே 1385- இல் தென்னகத்தின் தென்கோடி கடந்து தென்னிலங்கை மீதும் படையெடுத்துச் சென்றானென்றும், அந்நாட்டரசனைப் பணிய வைத்துத் திறைக்கொண்டு மீண்டதாகவும் அந்நாளைய விசய நகர ஆதாரங்கள் கூறுகின்றன.
பிந்திய இலங்கைப் படையெடுப்புகளிலெல்லாம் பாண்டியர் பங்கு தெளிவாக அறியப்படுகிறது.பாண்டியர் நீடித்த நிலையில் இதிலும் பாண்டியர் அரசராக இல்லாது படைத் தலைவர்களாகப் பணியாற்றி யிருக்கலாம். சிலர் 1435-இல் அடுத்த நூற்றாண்டிலுள்ள ஆதாரங்கள் குறிக்கும் இலங்கை வெற்றிகளின் தொடக்க நிகழ்ச்சிகளே இவைகள் என்றும் கூறுகின்றனர்.
முதல் தேவராசன்
இரண்டாம் அரிகரனுக்குப்பின் அவன் மூத்த புதல்வன் விரூபாட்கன் ஓர் ஆண்டும் புதல்வன் இரண்டாம் புக்கன் ஓராண்டும் மட்டுமே ஆண்டதாகத் தெரிகிறது. தந்தை நாளிலேயே இரண்டாம் புக்கன் இளவரசனாயிருந்ததை நோக்க, இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஓரளவு அரசுரிமை போராட்ட நிலையிலே இருந்திருக்க வேண்டும் என்னலாம். அயல்நாட்டுத் தொடர்புகள் இதனை ஓரளவு மெய்ப்பிக்கின்றன. எனவே இரண்டாம் அரிகரனின் மூன்றாம் புதல்வனான முதலாம் தேவராசன் ஆட்சி (1406-1422) 1404லேயே தொடங்கிற்று. என்னலாமானாலும், 1406லேயே போட்டியற்ற ஆட்சியாயிற்று.
தேவராசன் ஆட்சியின் முதல் ஆறு ஆண்டுகளுக் குள்ளாகப் பகமனிப் பேரரசன் பிரூசுக்கும் அவனுக்குமிடையே ஒரு சிறு போராட்டம் நடந்தது. இச்சமயம் பகமனி ஆட்சிக்கு