பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அப்பாத்துரையம் – 13

கைக்கு முன்னிலும் பெருவலுத் தருவதாயமைந்தது. விசயநகரப் படைகளும், இராசமகேந்திரவரம் படைகளும் ஒருங்குசேர்ந்து கொண்ட வீட்டரசனை முறியடித்து அந்நாட்டையே அவனிட மிருந்து கைக்கொண்டன. அது ஒரு தனியரசு என்ற நிலையே ஒழிக்கப்பட்டு அப்பரப்பு முழுவதும் விசயநகரப் பேரரசுக்கும், இராச மகேந்திரவர அரசுக்கும் இடையே பங்கிடப்பட்டது.

இதே போரில் பிரூசின் நண்பராயிருந்த இராச கொண்டா வேளமரும் தெலுங்குச் சோடரும் முறியடிக்கப்பட்டனர்.தெலுங்குச் சோடன் அனவேமனும் அவன் மைந்தன் வீரசோழனும் களத்தி லேயே மாண்டனர். அத்துடன் இராச கொண்டாவின் தலைசிறந்த கோட்டைகளான நல்கொண்டா, பாங்கல் ஆகிய இரண்டுமே1420-இல் விசயநகரத்தின் கைவசப்பட்டன.பாங்கலை மீட்டும் பெறும் எண்ணத்துடன் பிரூஸ் அதை இரண்டாண்டுகள் கடுமுற்று கைக்கு உட்படுத்தியும் இறுதியில் வெற்றி காணாமலே மீள வேண்டியதாயிற்று.

வீர வெற்றிகளுடனே தொடங்கிய பிரூசின் ஆட்சி தோல்வி மேகங்களினூடாக இறுதியில் மறுகிச் செல்ல வேண்டிய தாயிற்று. உள்நாட்டு நிகழ்ச்சியொன்று இம்மேகங்களை மேலும் இருளார்ந்தன ஆக்கிற்று. அந்நிகழ்ச்சி சில கூறுகளில் சிலப்பதிகார கால அரசியல் நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்டு கின்றது.

சேரன் செங்குட்டுவனையும் இளங்கோவையும் இருவரின் தந்தையார் பேரவையில் கண்ட ஒரு குறிகாரன் இளையவனுக்கே அரசயோகம் என்று கூறியிருந்தான். அண்ணன் தம்பியரிடையே பிணக்கை எழுப்பிய இந்தப் போலி அறவோன் செயலை முறியடிக்கும் எண்ணத்துடன் இளங்கோ அன்றே புகழுலகாளும் கலை யார் துறவு மேற்கொண்டதாக இளங்கோவே சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கிறார். பிரூசும் அவன் இளவலும் வீற்றிருந்த பேரவையிலும் இதுபோல ஜமாலுதீன் என்ற இஸ்லாமிய ஞானி தோன்றி இளவல் அகமதுக்கு அரசயோகம் அணுகுவதாகக் கூறினான். தமையன் உளங்கெடாமலிருக்க அகமது என்ன கூறியும், தம்பியை வெறுப்பதன் மூலம் பிரூஸ் ஞானியின் உரைக்கு மெய்ம்மை யூட்டினான். மனச் சலிப்புற்ற அகமது தக்க துணையாதரவுடன் அண்ணனை முடிதுறக்க வைத்துத் தானே அரசனானான்.