வெற்றித் திருநகர்
கணக்காகக் கொன்று பிணங்குவித்ததாக
வரலாற்றாசிரியர் பெரிஷ்டா தெரிவிக்கிறார்.
109
ஸ்லாமிய
விசயராயன் ஆட்சி கடந்து இரண்டாம் தேவராயன் ஆட்சி யில் அகமதின் கை விசயநகர் மீது நேரடியாகச் செல்லவில்லை. அவன் பேராவலே அவன் கைகளைச் சில காலம் கட்டி வைத்தது.
நடு ஆசியப் புயலான தைமூர் பெயரளவில் பகமனிக்குக் குஜராத்தையும், மாளவத்தையும், உரிமைப்படுத்தியதாகக் கூறியிருந்தாலும், பிரூஸ் காலத்தில் பகமனி இதைச் செயற்படுத்த எண்ணவில்லை. ஆனால் அகமது அதுவகையில் துணிந்து இரண்டு அரசுகளுக்கும் இடைப்பட்ட காண்டேஷ் நாட்டின் அரசன் நாசிர்கானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டான். காண்டேஷ் அரசன் புதல்வி இதனறிகுறியாக அகமதின் புதல்வன் இளவரசன் அலாவுதீனுக்கு மணமுடித்து வைக்கப் பெற்றாள்.
பகமனியின் வலிமையைக் குறைக்கும் எண்ணத்துடன் மாளவ அரசன் பகமனியின் சே அரசனான கேர்ளா நாட்டு நரசிங்கனைத் தாக்கினான். நரசிங்கம் பகமனியின் உதவி கோரினான். 1428-ல் தபதியாற்றுப் போரில் அகமது வெற்றி பெற்றான். ஆனால் இரண்டாண்டுகளுக்கும் அவன் குஜராத்து மீது படை யெடுத்து அதன் எதிர்தாக்குதலுக்காளானான். மாளவ அரசனும் இச்சமயம் கேர்ளா அரசன் மீது பாய்ந்து அவனை வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு இன்னொரு புறம் பகமனியைத் தாக்கினான். இந்நிலையிலும் அகமது ஒரு வழியாகத் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்ததானாலும், குஜராத்தின் மீதும், மாள வத்தின் மீதும் தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுத்துக் கேர்ளா நாட்டில் தன் பங்காகப் பேராரைப் பெற்று அமைய வேண்டியவன் ஆனான்.
பகமனி வடக்கிலும் மேற்கிலும் ஈடுபட்டிருந்த சமய முழு வதும், தேவராயன் கவனம் கீழ்திசை நோக்கி ஓடியிருந்தது. கொண்ட வீடு அவனை கைவிட்டு விட்டபடியால் அது கடந்து சோழப்பேரரசுக் காலத்தில் வடகலிங்கம் என்றழைக்கப்பட்ட ஒரிசாமீது அவன் படையெடுக்க முனைந்தான். ஆனால் தென் கலிங்கம் அல்லது இராசமகேந்திர வரமாண்ட அல்லாதன் டை நின்று ணக்கம் உண்டுபண்ணினான். ஆனால்