112
அப்பாத்துரையம் - 13
வடதிசையில் அமைதி ஏற்பட்டபின் இரண்டாம் தேவ ராயன் தென்திசை மாகாணங்களைச் சீரமைப்பதிலும், நேராட்சி யின் வலுவுக்குக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தி தமிழக ஆதாரங்களும், கேரள நாட்டின் “மலையாளப்பழம்" என்ற ஏடும் அவன் தமிழக வீர உலா பற்றிய பல செய்திகளை நமக்குத் தருகின்றன. விசய நகரத் தொடக்க காலத்தில் பாண்டியர் ஆட்சி தளர்ந்திருந்ததால் வட தமிழகத்தில் சம்புவராயர் வலிமையுற்று, விசயநகரத் தலைவர்களால் வெல்லப்பட்டபின் அவர்கள் நட்புப் பெற்று மீட்டும் ஆட்சித் தலைவர்களாக விளங்கி வந்தனர். அது போல மதுரைச் சுற்றுப்புறத்திலும், தென் தமிழகத்திலும் மிகத் தொல் பழங்காலப் புராணக் கதை களுக்குரிய மாவலியின் மரபினர்களாக வாணாதி ராயர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர். சில சமயம் தென்னகத்தின் வடதிசையிலும், தமிழகத்தின் வடதிசையிலும் இவர்கள் ஆண்டதுண்டு. இரண்டாம் தேவராயன் வீர உலாவில் இவர்களைக் கீழடக்கப் பாண்டியன் பெரிதும் உதவி யிருந்தான். தளர்ந்துவந்த பாண்டிய மரபுக்கும், வளர்ந்துவந்த விசயநகர மரபுக்கும் இந்த நட்பு விரூபாக்கன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் புகழ் வளர்த்தே வந்துள்ளது காண்கிறோம்.
தமிழக உலாமுடிவில் பேரரசன் மலையாளக் கரை வழியாகச் சென்று கொல்லம் அரசனையும் மற்றக் கேரளத்தின் சிற்றரசர்களையும் வென்றடக்கினான். “வேழநாடு வென்ற வேழவேட்டைக்காரன்” என்று தென்னக ஆதாரங்கள் அவனைச் சிறப்பிக்கின்றன. மேல்கரை முழுதும் குமரி முதல் கோவா வரை விசயநகரப் பேரரசின் மேலாட்சிக்குரியதாயிற்று. பேரரசு கீழ்கடல் தென் கடல்களைப் போலவே மேல்கடலும் அளாவிற்று.
கள்ளிக்கோட்டை ஆண்ட சாமூதிரி ஒருவனே மேல் கரை யில் தேவராயனுக்கு முற்றிலும் உட்படாத தனியரசன். பாண்டி யரைப் போலவே அவனும் கடற்படையுடையவனா யிருந்ததுடன் விசயநகரத்தின் ஆற்றலை மதித்து நேச உறவு கொண்டிருந்தான். பாரசீகத் தூதன் அப்துர் ரசாக் முதலில் அவனிடமே விருந்தின னாக வந்து தங்கியிருந்தான். தேவராயன் அவ்வருகையறிந்து அவனைத் தன்பால் அனுப்பும்படி பணித்த பின், சாமூதிரி