(116)
அப்பாத்துரையம் - 13
திருமறையான திருக்குரானையே அவன் அவர்கள் ஆணை வணக்கங்களின் முன்னிலைச் சின்னமாக்கினான்.
பாலறியாத குருடன் பலருடன் உசாவி பால்வெள்ளை, வெள்ளை கொக்கின் நிறம், கொக்கு முடக்கிய கைபோல் வளைந்திருக்குமென்றறிந்து பால் வளைந்து இருக்குமென்று முடிவு செய்து கொண்டதாகக் கதை கூறுவதுண்டு. அதுபோல தென்னகத் தேசீயத்தை இந்துமதத் தேசீயமாகவும், இந்து மதமாகவும், அதை மீண்டும் வடதிசை அயலின, அயற் பண்பாட் டலைக்குரிய திறமாகவும் கொண்டுவிட்ட வரலாற்றாசிரியர்கள், விசயநகரப் பேரரசின் இத்தகு தென்னகத் தேசீய பண்பைக் கண்டு அங்கலாய்த்துக் கொள்கின்றனர். சிலர் சீற்றங்கூடக் கொள்கின்றனர். “அகந்தை பிடித்த இந்த இஸ்லாமிய வீரர்கள் தவிசிலிருக்கும் மன்னன்கூட இஸ்லாமியனாய் இல்லாவிட்டால் வணங்காதவர்கள். அதனால் அவன் முன் வைத்த குரானையே வணங்கினார்கள். இத்தகையவர்கள் அரசருக்கு உண்மையாய் இருப்பார்கள் என்பது ஐயுறவுக்குரியதாகும்" என்று அறிஞர் சூரிய நாராயணராவ் வரைகிறார். விசய நகர அழிவுக்கே ச்செயலும் இது போன்ற மதவேறுபாடற்ற செயல்களும் காரணமென்று 'இந்து மத தேசீயம்" சார்ந்த வரலாற் றாசிரியர்கள் விளக்குகிறார்கள்.
66
'அங்க, வங்க, கலிங்க மன்னர்கள் பேரரசன் முன்னிலையில் காத்துக்கிடந்தனர். அவர் குதிரைப்படையில் 10,000 இஸ்லாமியர் இருந்தனர்” என்று அந்நாளைய ஆதாரம் கூறுகிறது.
இஸ்லாமியரை மற்றத் தென்னக மக்களுடன் மக்களாக, வீரருடன் வீரராக நடத்திய இந்தப் பண்பு இரண்டாம் தேவராயன் காலத்துப் பண்பன்று, அவனோடு நின்றுவிட்ட பண்புமன்று. முந்தய பேரரசர்களிடமும் பிந்தய பேரரசர் களிடமும் தொடர்ந்து இருந்து வந்த கோட்பாடே, இரண்டாம் தேவராயன் அதனை அரசியல் துறையிலும் படைத் துறையிலும் பேரளவில் நிறைவேற்றிய முதற்பேரரசன் மட்டுமே.
இது தென்னகத் தேசீயத்தின் தோல்வியென்றால், அது தென்னகத்தில் புகுந்த ஏதோ ஒரு கோளாற்றின் காரணமே தவிர, தேசீயத்தின் தவறல்ல என்று காண்டல் எளிது. உண்மை