வெற்றித் திருநகர்
117
யாதெனில் வடதிசைப் புயற்பண்பு இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதார் ஆகிய மக்களையும் அரசு பேரரசுகளையும்கூடச் சில நாள் அலைக்கழித்துத் தென்னகத் தேசீயத்துக்கும் அகல் உலகப் பண்பாட்டுக்கும் குந்தகமாயிருந்து வந்தது என்பதே.
பேரரசு மக்கள் இலக்கியம் வளர்க்கும் பேரரசாகவும் இரண்டாம் தேவராயன் காலத்திலிருந்தே வளர்ந்திருந்தது. பேரரசனே பெரும்புலவன், சமஸ்கிருதத்தில் அவன் பெயராலேயே காவியமொன்றும், பிரமசூத்திரப் பேருரை ஒன்றும் இயங்குகின்றன. அவன் காலத்திலும் அவன் அவையில் இருந்த புலவர்கள் எண்ணற்றவர்கள். மக்கள் மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்றுடன் சமஸ்கிருதமும் அவன் காலத்திலும் அதன் பின்னும் பேரரசர் ஆதரவு பெற்றன. தவிர அரசவைப் புலவர் மரபும் (Poet Laureate) அவன் காலத்திலிருந்தோ அதற்கு முன்னிருந்தோ தொடங்கியிருந்தன. அவன் காலத்தில் அப்பதவி வகித்த பெரும் புலவன் திண்டிமனை முறியடித்து மக்கட் புலவர் சீநாதர் அடைந்த சிறப்புப் பற்றிய கதையைத் தெலுங்கு மரபு பேணியுள்ளது. தங்கம் என்றழைக்கப்பட்ட அந்நாளைய பொன் நாணயங்களாலேயே பேரரசன் சீநாதரைத் திருமுழுக்காட்டுவித்தானென்று அம்மரபு குறிக்கிறது. சங்ககால சேர சோழ பாண்டியர் வண்மையையே இது நினைவூட்டுகிறது.
பேரரசர் இரண்டாம் தேவராயன் அவையில் பாரசீகத்தூதன் அப்துர் ரசாக் சில ஆண்டுகள் தங்கியிருந்து 1443- லேயே தன் தாயகமான பாரசீக நாடு சென்றான். அவன் இருந்த நாட்களிலேயே தேவராயனை அவன் இளவல்களில் ஒருவன் கொலை செய்ய முயற்சி செய்ததாக அறிகிறோம். இச்சமயம் பகமனியின் அகமது ஷாவின் புதல்வன் அலாவுதீன் அரசனா யிருந்தான்.அவன் இந்த நிலையைப் பயன்படுத்தி விசய நகரத்தின் மீது படையெடுத்தான். இரேய்ச்சூரில் நடைபெற்ற போரில் தொடக்கத்தில் விசய நகரப் படைகள் வெற்றி பெற்றாலும், இறுதியில் பகமனியின் கையே மேலிட்டதாகக் கூறப்படுகிறது.
அலாவுதீன் தன் தந்தை காலத்திலேயே காண்டேஷ் அரசனின் புதல்வியை மணம் செய்திருந்தான். 1437-இல் அவன் கொங்கண நாட்டை வென்று அதன் அரசனான சங்கமேசுரன் புதல்வியையும் விரும்பி மணந்திருந்தான். முதல் மனைவியைப்