பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

அப்பாத்துரையம் – 13

புறக்கணித்து இரண்டாம் மனைவியிடமே அவன் உயிராயிருந்த தனால், அரண்மனையிலும் ஆட்சியிலும் அவன் நாளில் நாட்டு முஸ்லீம்கள் (தென்காணியர்), அயல்புல முஸ்லீம்கள் என்ற கட்சி வேறுபாடு தோன்றி பகமனி அரசியலே தொடர்ந்து இரண்டு பட நேர்ந்தது. தேவராயன் ஆட்சியில் அவன் ஆட்சிக்கால நகரையும் பேரரசுப் புகழையும் நேரில் கண்டெழுதிய அப்துல் ரசாக்கின் விரிவுரைகளில் நமக்கு அவை இன்றும் உ ன்றும் உயிரோவிய மாக நின்றாடுகின்றன.

மல்லிகார்ச்சுனன் ஆட்சிக்காலச் சரிவு

இரண்டாம் தேவராயனுக்குப்பின் அவன் மூத்த புதல்வன் இரண்டாம் விசயராயன் ஒரே ஓர் ஆண்டும், இளைய புதல்வன் மல்லிகார்ச்சுனன் (1447-1465) பத்தொன்பது ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினர். மல்லிகார்ச்சுனன் திறமையோ தகுதியோ சிறிது மற்றவன். அவன் இரண்டாம் தேவராயன் காலப் புகழைப் படிப்படியாகச் சிதறவிட்டான். அடுத்த ஆட்சிகளும் இதனைச் சரி செய்ய இயலவில்லை. ஆயினும் பேரரசின் பெருங்குடி மக்களில் பலர் வீரத் தலைவராகிப் பேரரசு முற்றிலும் சரியாமல் காத்ததுடன் நில்லாது. அடுத்த மரபுக் காலங்களுக்குள் அதனை மீண்டும் புகழ்க் கோட்டையாகக் கட்டியெழுப்பத் தொடங்கினர்.

தெலுங்காணத்தில் பகமனி ஆட்சி பரவுந்தோறும் வீர வேளமர் குடிகள் பல அங்கிருந்து வெளியேறி விசய நகரப் பேரரசில் உதயகிரி மாகாணத்திலும் கீழ்கரைப் பகுதிகளிலும் வந்து குடியேறிப் புதிய வலுத் தேடினர். அவர்கள் பொதுவாக விசயநரகப் பேரரசிடம் பாசம் உடையவர்களாகவே இருந்தார்கள். ஆனால் விசய நகரத் தலைவர்களுடன் அவர்கள் அடிக்கடி மோத நேர்ந்தது. வேளமர் குடிகளில் ஒன்று கர்நூல் மாவட்டத்திலுள்ள வேலுகோடி என்ற இடத்தில் குடியேறி மிகவும் வல்லமை வாய்ந்த மரபாக வளம் பெற்றது. அதன் பெரும் பகைவனாக விளங்கியவன் கண்டிக்கோட்டையாண்ட போலேப் பள்ளி புக்கராஜா என்பவன். அவர்களது போட்டி பூசல்களால் விசயநகரப் பேரரசனின் ஆற்றலும், பேரரசின் கட்டுப்பாடும், ஒற்றுமையும் தளர்வுற்றன.

விசயநகரப் பேரரசின் தாக்குதல்களுக்கு ஆளாகி அவதியுற்ற நாடுகளெல்லாம் பேரரசின் தளர்ச்சி கண்டு அதன்