பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

அப்பாத்துரையம் – 13

அவ்வாண்டிலேயே நரசிம்மன் உதயகிரி மாகாண த்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் மேலும் வடதிசையில் முன்னேறும்முன் தெற்கே தமிழ் மாகாணத்தில் தொல்லை தொடங்கிற்று. கம்பன் என்ற ஒரு தலைவன்தான் சோழ மரபின் உரிமையாளன் என்று கூறிக்கொண்டு கிளர்ந்தெழுந்தான். அவனுடன் வடபாண்டி நாட்டில் ஆண்ட பாண்டியக் கிளைக்குடியினன் ஒருவன் சேர்ந்து கொண்டு முன்னேறினான். விசயநகர ஆதாரங்கள் அவனைச் "செவுள போதலு” அல்லது "லம்பகர்ணன்" என்று கூறுகின்றன. அவன் காஞ்சி நகரைக் கைப்பற்றி அங்கே சிலகாலம் “புவனைகவீரன் சமர கோலாகலன்” என்ற ஆரவார விருதுடன் வீற்றிருந்தான். இத்தமிழகக் கிளர்ச்சியை நரசிம்மன் ஓர் ஆண்டுக்குள் ஒடுக்கிவிட்டு மீண்டும் வடக்கே திரும்பினான். 1471-இல் காண் வீடும்

மசூலிப்பட்டணமும் அவன் ஆட்சிக்கு உட்பட்டன.

கஜபதி அரசுரிமைப் போரில் கபிலேசுவரனின் உரிமைப் புதல்வன் அம்பீரன் அல்லது அம்பரும், அன்புப் புதல்வனான புருஷோத்தமனும் போட்டியிட்டனர். இராச மகேந்திர வரத்தையும் கொண்ட வீட்டையும் வெல்ல உதவுவதாக வாக்களித்து அம்பீரன் பகமனிப் பேரரசின் உதவிபெற்றான். ஆனால் பகமனிப் படைகள் அவனைத் தவிசேற்றுவித்து மீண்டதும் புருஷோத்தமன் திரும்பி வந்து நாடு முழுவதும் கைக்கொண்டான். ஆயினும் அம்பீரன் அவனுடன் சமரசம் செய்து கொண்டு அவனுக்குக் கீழ்பட்டுக் கும்மிடியிலிருந்து ஆள ஒப்புக் கொண்டான். அத்துடன் இராசமகேந்திர புரத்தையும் கொண்ட வீட்டையும் பெறப் பகமனிக்கு அவன் உதவியும் வழங்குவித்தான்.

து

பகமனிப் பேரரசு இப்போது சிதறும் தறுவாயில்தான் இருந் தது. ஆனாலும் நூறாண்டு வாழ்ந்த அதன் பெரும் பெயரமைச்சன் கவான் திறமையில் அதன் புகழும் பரப்பும் இன்று உச்ச நிலையே யடைந்தது. பேரரசு. இது கடல்களும் அளாவியிருந்த காலம் இதுவே. ஆனால் பேரரசின் உள்ளார்ந்த வலிமைக் கேட்டையும், உட்கட்சிப் பிளவுகளையும், உணர்ந்த அவ்வமைச்சன் தான் நடுநிலை வகித்து, பேரரசை நான்கு மாகாணமாய்ப் பிரித்து, கட்சிகளுக்குச் சரிசமப் பிரதிநிதித்துவம்