பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

அப்பாத்துரையம் – 13

படைகளில் வீரராகவும், தலைவராகவும் சேர்த்துக் கொண்டனர். அத்துடன் வட திசைப் புயல் மரபில் வந்த முஸ்லீம் வீரர்களின் பண்புகளை ஆய்ந்துணர்ந்து அதைச் சமாளிக்கவும் நிலையான வகைகள் மேற்கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழரசரைப் போல, அவன் தன் படைகளை நிலவரத்துறைகளாக்கி, அவற்றின் பயிற்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வந்தான். அவனும் முன்பின் பேரரசர்களும் திறமை வாய்ந்த அயல் நாட்டாரை இப்பயிற்சித் துறையில் அமர்த்தத் தயங்கவில்லை. காரணமாக விசயநகரப் படைகளின் பயிற்சித் திறமையும் விசயநகரப் பேரரசர், படைத்தலைவரின் போர்த்திறமை, படைத்தலைமைத் திறமைகளும் வெளிநாட்டார் கண்டு வியக்கத்தக்கவை ஆயின.

வை

கொள்ளைப் படைகளைக் கண்டால் கிலிகொண்டோடும் இடைக்காலக் கீழ்திசைப் படைமரபுக்கும், பொது மக்கள் மரபுக்கும் சாளுவ நரசிம்மனும் அவன் பின்னோரும் ஒரு முடிவு கண்டனர். படைத்துறையிலும் சரி, பொது வாழ்விலும் சரி சாளுவ நரசிம்மன் காலமுதல் போர்வீரம் ஓர் இயல்பான பண்பாகப் பேணி வளர்க்கப்பட்டது. பெருமக்களிடையே மற்போர்கள், பொது மக்களிடையே குத்துச்சண்டைப் போட்டி, சிலம்பம் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டன.

சாளுவ நரசிம்மனின் ஐந்தாண்டுக் கால ஆட்சி முழுவதும் ஒருபுறம் உள்நாட்டுக் குழப்பங்களை அடக்குவதிலும், மறுபுறம் ஒரிசா, பகமனித் தலைவர்களுக்கு ஈடு கொடுப்பதிலுமே கழிந்தது. கிளர்ச்சிகளுள் தலைமையானவை பேரணிப்பட்டுத் தலைவரான சம்பேட மரபினர். வடகொங்கு அல்லது மைசூர்த் தொகுதியைச் சார்ந்த உம்மாத்தூர்ப் பாளையக்காரர் ஆக கியவர்கள் எழுச்சிகளே. பழய பேரரச மரபை ஒழித்துப் பெரு மக்களில் ஒருவரையே பேரரசுப் பீடத்தில் ஏற்றியதன்மூலம் இனி ஆட்சி முற்றிலும் தம் கைப்பட்டே இருக்கும் என்று இத்தகையப் பெருமக்கள் மனப்பால் குடித்திருந்தனர். ஆனால் முன்னைய பேரரச மரபினரைவிட அவன் பேரரசில் ஒற்றுமையும் வல்லாட்சியும் நாடியது கண்டதே, அவர்கள் ஆர்வ ஆதரவு மூர்க்க எதிர்ப்பாக மாறிற்று.