பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

அப்பாத்துரையம் – 13

கன்னட நாடு அல்லது வடகொங்கு, துளுநாடு அல்லது மேல்கொங்கு நாடு ஆகியவற்றைக் கலக்கிற்று. ஏனெனில் உம்மாத்தூர் கன்னட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பாளையம். அதன் கிளர்ச்சிக்குத் துளு நாட்டிலுள்ள சங்கீதபுரத் தலைவன் ஊக்கமளித்துக் கிளம்பியிருந்தான். இக்கிளர்ச்சிக அடக்கச் சாளுவ நரசிம்மன் நீண்டநாள் அரும்பாடுபட வேண்டியதாயிற்று. அத்துடன் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டுத் தலைநகரங்கள் பிடிக்கப்பட்ட பின் கூட, அவற்றின் ஆட்சித் தலைவர்கள் ஓடிச் சென்று பாகனூர்ப் பகுதியில் அரண் செய்து கொண்டு சாளுவ நரசிம்மன் ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டிக் கொண்டே இருந்தனர். தன் ஆட்சியின் கடைசி ஆண்டு களிலேயே அவன் அவர்களை அழித்து அவ்விடத்திலும் தன் ஆட்சிக்கொடி நிறுவமுடிந்தது.

உள் நாட்டிலுள்ள இப்போர்கள் சாளுவ நரசிம்மன் முழு ஆற்றலையும் கவர்ந்து கொண்டிருந்தன. எனவே வெளியார் படையெடுப்பை எதிர்த்து நிற்கும் பேரரசின் ஆற்றல் மிகவும் குறைவுற்றிருந்தது. இதையறிந்த கசபதியரசன் புருடோத்தமன் கிளர்ச்சிகளை ஒருபுறம் தூண்டிவிட்ட படியே வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல் தொடங்கினான். 1487-லிருந்து 1489-க்குள்ளாக அவன் இராசமகேந்திரவரத்தை முழுவதும் கைப்பற்றி அங்கே தன் ஆட்சியை நிலவரப்படுத்தினான். அதன் பின் தன் இறுதி ஆண்டுக்குள்ளாகவே அவன் முன்னேறி உதயகிரியையும் கொண்ட வீட்டையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். ஒரிசா ஆட்சி இப்போதும் கபிலேசுவரன் காலத்து எல்லையை அடையவில்லையாயினும், அது ஒரிசாவிலிருந்து நெல்லூர் அருகே குண்டலகம்மா ஆற்றின் கரை வரை பரந்துவிட்டது.

இப்போரில் சாளுவநரசிம்மன் துயர்கள் தோல்வியுடன் அமையவில்லை. அவனே எதிரியின் கையில் சிறைப்பட்டு, உதயகிரியையும் கீழ்திசை வெற்றிகளையும் முழுதுமே விட்டுக்கொடுத்துத் தான் விடுதலை பெற வேண்டி வந்தது. தோல்வியின் கறையுற்ற அவன் உள்ளம் துடிதுடித்தாலும் உடலும் உயிரும் மேலும் போரிட இடந்தரவில்லை. தோல்வி யாலும், அவமானத்தாலும் ஏற்பட்ட மனமுறிவே நோயாகி அவன் இறுதிப்படுக்கை யடைந்தான்.