வெற்றித் திருநகர்
137
பகமனிப் பேரரசில் மூன்றாம் முகமதுக்குப் பின் ஆண்ட மாமூது (1482-1518) பெயரளவிலேயே பேரரசனாக ஆட்சி செய்து வந்தான். பீஜப்பூரில் மாகாணத் தலைவனாய் இருந்த யூசுப் ஆதில்கான் 1489-லேயே பீஜப்பூரைத் தனியரசாக்கி யூசுப் ஆதில்ஷா என்ற அரசுரிமைப் பெயருடன் தன்னாட்சி தொடங்கியிருந்தான். கிட்டத்தட்ட அதே ஆண்டுக்குள்ளேயே தெக்கானி கட்சித் தலைவன் நிஜாம் உல்முல்க் பஃரி அகமது நகரில் அதுபோலத் தன்னாண்மை பெற்றான். பேரரசிலோ இமத்ஷா 1485-1488லேயே தன் உரிமை நாட்டியிருந்தான். கோலகோண்டா மாகாணத் தலைவன் குதுப்ஷாவும் பீஜப்பூருடன் போட்டியிட்டு வளர்ந்து வந்தான். 1512-க்குப் பின் அவ்வரசும் தன்னாட்சி நிறுவிவிட்டது. இப்பிரிவினைகளைத் தடுக்க முடியாத பேரரசின் மைய அரசாகிய பீடாரில் கூட, உண்மை வலிமையை முற்றிலும் முதலமைச்சனான காசிம்பரீதே கையாண்டு வந்தான். அவனே வளரும் பீஜப்பூருக்கு எதிராக நரசநாயகனை ஈடுபடுத்தும் எண்ணத்துடன் அவனிடம் இந்த ஆசைக்குரல் எழுப்பினான்.
பரீதின் அழைப்புப் பெற்று நரசநாயகன் 1492-1493-இல் இரேய்ச்சூர் மண்டலத்தின் மீது படையெடுத்துப் பெருங்குருதிப் போராட்டமாடினான். பரீத் இதே சமயம் பீஜப்பூரை இன்னொரு புறமிருந்து தாக்கி வந்ததனால், பீஜப்பூர் அரசன் நரசநாயகனுக்கெதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மிகவும் திண்டாடினான். இரெய்ச்சூர் மண்டல முழுவதும் சூறை கொள்ளை பரப்பி நரசநாயகன் வெற்றிமேல் வெற்றி பெற்றுவந்தான். ஆதில்கான் இப்போது இரேய்ச்சூர் மண்டலத்தை விட்டுக் கொடுத்து நேச ஒப்பந்தம் செய்து கொண்டான்.
வடதிசையில் இவ்வாறு மும்முரமான போரிலீடுபட்டிருந்த இந்தச் சமயத்திலும் நரசநாயகனுக்குத் தெற்கே தமிழகம் திரும்பும் அவசியமும் வாய்ப்பும் ஏற்பட்டன. திருச்சிராப்பள்ளி - தஞ்சை மாவட்டங்களை ஆண்டுவந்த விசயநகர மண்டலத் தலைவன் கோனேடிராசன் நரசநாயகனின் ஆட்சியை மதியாமல் தன்னாண்மையுடன் ஆளத் தொடங்கியிருந்தான். சேர சோழ மரபினரும் பாண்டியனுமான ம் பூடணனும் அவனுக்கு உடந்தையாகவே இருந்ததனால், தமிழக முழுவதும் அவன்