வெற்றித் திருநகர்
139
யால் முறியடித்துக் கொக்கரித்தான். ஆனால் நரசநாயகன் இதனால் மாண்ட்விக் கோட்டையை இழந்தானே தவிர, இரெய்ச்சூரின் பிடியைக் கைவிடவில்லை.
அடுத்த ஆண்டே யூசுப் ஆதில்கானுக்குத் தன் விருப்பம் ஈடேற்ற மறுபடியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
"பகமனிப் பேரரசன் மாமூது ஆட்சி வலுவற்றவனாய் இருந்தாலும், மத வெறியிலும் வடதிசைப் புயல் பண்பார்வத் திலும் பின்னிடாதவன். கீழ்ப்படிதலற்ற தன் மாகாணத் தலைவர்களை ஒன்றுபடுத்திச் செயலாற்ற வைக்க அவன் ஒரு திட்டமிட்டான். ஆண்டுதோறும் ஒரு நாள் பீடாரில் அனைவரும் கூடி முஸ்லீம் அல்லாத நாடான விசயநகர மீது ஒரு புனிதத் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அத்திட்டம். 1501-இல் தீட்டப்பட்ட திட்டப்படி 1502-லேயே இஸ்லாமியத் தலைவர்கள் கூடி இரேய்ச்சூர் மண்டலத்தின் மீது தாக்குதல் தொடங்கினர்.
இத்தடவை ஆதில்ஷா எளிதாக இரேய்ச்சூர், முட்கல் கோட்டைகளையும், இரேய்ச்சூர் மண்டலத்தையும் மற்றத் தலை வர்களின் உதவியுடன் கைக்கொண்டான்.
முதல் தேசீயச் சிற்பியாகிய சாளுவ நரசிம்மன் வெற்றிகர மாகப் போர் செய்துகொண்டே இறுதியில் தோல்வியிடையே மாள நேர்ந்தது. அவனோடொத்த தேசியச் சிற்பியாகிய நரசனோ, வெற்றிமேல் வெற்றியாக வெற்றிப் பாதையிலேயே சென்றும் வெற்றிப் புகழ் உச்சியிலிருந்த சதியால் விழுந்து மாள நேர்ந்தது. போர்க்களத்துக்கு அஞ்சாத சிங்கங்கள் இரண்டில் ஒன்று சுழல் புயலில் சிக்கி அழிந்தது; மற்றது சதிக்களத்தில் பங்கமுற்றது.
கைக்கெட்டியதும் வாய்க்கெட்டவில்லை என்பது போல, இரெய்ச்சூர் வெற்றி தொடங்கியும், இரெய்ச்சூர், உதயகிரிக் குரல் நிறைவேறாமலே போயிற்று. பேய்ச்சூர்க்குரல்கள் ஒன்றுக்கு இரண்டாக அவன் பின்னோர்கள் அகக் காதுகளில் ஒலித்தன.
நரச நாயகனுக்குப் பின் அவன் மகன் இம்மடி நரச நாயகன் என்ற வீர நரசிம்மன் பேரளவில் அரசனாய் இருந்த இம்மடி நரசிம்மனைக் கொன்று தானே பேரரசனானான். இம்மடி