பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

[141

து

நகரத்தில் இது இஸ்லாமிய எதிர்ப்பின் பேரால் மக்கள் சமயத்தின் மீது வைதிக ஆதிக்க ஆட்சியும், சமுதாய சமய அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையும், பொருளில் வாழ்வுக்குக் குந்தகமும் விளைவித்திருந்தது. விசயநகரப் பேரரசு இவ்விரு திசைப்பட்ட நான்கு பண்புகளையும் முற்றிலும் எதிர்த் தழித்திருக்கக் கூடுமானால், அது 1565ஆம் ஆண்டைய அகப் புயலுக்கோ,அதற்குப் பிற்பட்ட புறப் புயல்களுக்கோ ஒருபோதும் ஆளாகியிருக்க முடியாது. அது மட்டுமன்று. தென்னகமோ, கீழ்த்திசையோ என்றும் அயலாட்சிக்கோ, அயலினப் பொருளியல் சுரண்டலுக்கோ அடிமைப்பட்டிருக்காது. ஆனால் விசயநகரப் பேரரசர் பொதுவாக, தேசீயச் சிற்பிகள் சிறப்பாக இந்த இருதிசை நாற்பண்புகளையுமே எதிர்த்தழிக்கப் பாடுபட்டனர். விசய நகரப் பேரரசு வரலாற்றை இதன் மூலமே அவர்கள் தென்னகத் தேசீயத்தின் நிலையான கலங்கரை விளக்கமாக்கியுள்ளனர்.

இரண்டாம் தேவராயன் காலத்துக்கு முன்னிருந்தே பேரரசர்கள் முஸ்லிம்களைப் படைத்துறை வீரராகவும் தலைவர்களாகவும், ஆட்சிப் பணியாளராகவும் சேர்த்துக் கொண்டிருந்தனர். தேசீயச் சிற்பிகள் இதனை இன்னும் விரிவுபடுத்தினர். இந்து தேசீயம் போற்றும் வரலாற்றாசிரியர் இச்செயலை இந்து தேசீயத்துக்கு மாறான போக்கு என்றும், இஸ்லாமியரைச் சேர்ப்பது மூலம் படைத்துறைக்கு வீரப் பண்பூட்டும் நிலை மட்டுமே நாடினர் என்றும் கருதியுள்ளனர். இதில் முந்திய குற்றச்சாட்டில் அரைகுறை உண்மை உண்டு, பிந்திய கருத்து அரைகுறை மெய்ம்மை மட்டுமே, ஏனெனில் 'இந்து' என்ற பெயரின் வரம்பு கடந்து பேரரசர் தென்னகத் தேசீயமே கண்டனர் என்பதை குற்றச்சாட்டே வலியுறுத்துகிறது. இஸ்லாமிய வடதிசைப் புயல் சார்ந்த சூறை வீரத்தை அச்சூறை காக்கும் வீரமாக்க விரும்பியதும் இத்திசை படைத்துறையை வீரமாக்க இதனை மட்டுமே நம்பி இருக்கவில்லை. படைத் துறையையும் அதற்கு மூலாதாரமான தேச மக்களையும் வீரப்பண்புடையவர்களாக்க இச்சிற்பிகளும் அவர்கள் வழி வந்த பேரரசர்களும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். இதனை வரலாற்றாசிரியர்கள் கண்டு போற்றிப் பாராட்டியும் உள்ளனர்.