பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அப்பாத்துரையம் – 13

தமிழகம் நீங்கலான கீழ்திசையின் படைகள் விசய நகரத்துக்கு முன்னும் பின்னும் கூட, வெறும் மக்கட் கும்பல்களாகவே இருந்தன. விசயநகரப் பேரரசர் பொதுவாக, தேசீயச் சிற்பிகளும் பின்னோரும் சிறப்பாக, மேலைநாட்டாரும் கண்டு வியக்கும் படைப்பயிற்சி அதற்கு அளித்திருந்தனர். சிற்பிகளும் பிற பேரரசுக்கும் உலகின் ஒப்புயர்வற்ற படைத் தலைமைத்திறம் உடையவர்களாகவும் இருந்தனர். ஆனால் இவற்றாலும் சிற்பிகள் மனமமையவில்லை. நாட்டு மக்களிடையிலேயே வீர உணர்வு வருவித்து, கொள்ளையிலும் போரிலும் கிலி கொள்ளாத மக்கட் பண்பையும் வீரத்தையும் வளர்க்கத் திட்டமிட்டனர். சிலம்பம், வீர விளையாட்டுக்கள், வீரக் கேளிக்கைகள் ஆகியவையும் வேட்டையாட்டங்களும் பெருமக்களிடையிலும் மக்களிடையிலும் ஊக்கப்பட்டன. வீரஞ் சிறந்தவர்களை அத்துறையில் மேலும் ஆர்வமூட்ட அவர்கட்கு ஆடலழகியர்களையும் அரண்மனை மாளிகைகளையும் வழங்கினர்.

-

பொது

தமிழக, தென்னகப் பேரரசர்களில் கூட மிகப் பெரும் பாலானவர்கள் விசயநகரத் தொடக்க காலப் பேரரசர்கள் உட்பட - தேசீயத்தில் மிதந்தவர்களேயன்றித் தேசீயக் கனவு கண்டவர்களோ தேசீயக் கோட்டைகட்ட திட்டமிட்டவர்களோ அல்லர். பெரும்புகழ்க் கரிகாலன், பெரும் பாண்டியர், இராசேந்திர சோழன் போன்றவர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. இத்தேசீயக் கனவை நாம் சேரன் செங்குட்டுவனிடமும், சிலம்பு பாடிய இளங்கோ விடமும் காண்கிறோம். பெருஞ் சோழரிடையே அக்கனவு கண்டதுடன் அதற்குத் திட்டமிட்ட வர்களாக முதலாம் இராச இராசன், முதலாம் குலோத்துங்கள் ஆகிய இருவரைக் காண்கிறோம். அவர்கள் கண்ட தென்னகத் தேசீய எல்லைதான் விசயநகரம் கண்டதும் - விசய நகரத்துக்குப் பின் மைசூர்ப் பேரரசர் கண்டதும் ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாணமும் அதனைச் சார்ந்த தனி அரசுகளும் சேர்ந்த பரப்பு கிட்டத்தட்ட இதுவே. இதன் எல்லையில் சோழர் காலம் முதல் இறுதி வரைப் போராட்டக் களங்களாய் அமைந்த பகுதி இரேய்ச்சூர் - உதயகிரிப் பகுதியே. இரேய்ச்சூர் - உதயகிரி என்ற சிற்பிகளின் பெய்ச்சூர்க் குரல்களில் புதையுண்ட மறை தேசீய உண்மையும் இதுவே.