வெற்றித் திருநகர்
(143
தேசீயத்துடன் இணையாத அரசு பேரரசுகளே உலகில் பெரும்பாலன. தொடக்கக்கால விசயநகரப் பேரரசர் போலத் தேசீயத்தில் மிதந்து செல்லும் பேரரசர்கள்கூட வரலாற்றில் அருகலானவர்கள், அருமைப்பாடு உடையவர்கள். இந்த ஒரு வகைக்கும் அப்பாற்பட்ட தேசீயத் திட்டம் அமைக்கும் பேரரசர், பெருந்தலைவர்களிலும் முதல் வரிசையில் இடம் பெறத்தக்கவர்கள் தேசீயச் சிற்பிகள். சேரன் செங்குட்டுவன், இராசஇராசன், குலோத்துங்கன் ஆகியோர் மரபு இவ்வகையில் அவர்கள் வாழ்வில் கிட்டத்தட்ட முழு நிறைவும் உச்ச நிலையுமே அடைகிறது எனலாம். அவர்கள் காலத்துக்குப் பின் அதே மரபு பேணித் தேசீயக் கனவார்வமும், தேசீயத் திட்டமும் வகுத்த பேரரசர்கள் தென்னகத்தில் மைசூர்ப் பேரரசரும், தென்னக எல்லையடுத்து மராத்திய தேசீய வீரன் சிவாஜியுமேயாவர்.
வருங்காலத் தென்னகத் தேசீய இயக்கத்திற்கும் உலக அமைப்புக்கும் சாளுவ நரசிம்மனும் நரசநாயகனும் இருபெருங் கலங்கரை விளக்கங்கள் ஆவர்.