பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பீடார்ந்த பெருங்கல நாயகர்

நாடார்ந்த செல்வங் குவித்திழந்தார் நவைநீங்கிவினைப் பாடார்ந்த செல்வம் பெருக்கிப் பகையறத் தென்னகத்தே ஏடார்ந்த செல்வம் இனிதோங்க வெற்றித்திருநகரின் பீடார்ந்த செல்வப் பெருங்கல நாயகர் வாழியரோ! அங்கங் குலுங்கக் கலிங்கங் கலங்கக் கடகநகர் வங்கங் கறங்கப் பிறங்கும் துரங்கப் படைநடத்திக் கங்கன் தரங்கத் தழுங்கக் களங்கொண் டடல்யவனர் சங்கந் தயங்கக் கடந்தடுஞ் சிங்கங்கள் வாழியரோ!

தென்கடல்

முத்தும் சங்கும்

அகழ்ந்தெடுத்துத் தென்னிலங்கை மாணிக்கமும் வடகொங்கின் மாசறு பொன்னும் வயிரமும், அருமணத்தின் நறுமணங்களும், கடாரத்தின் ஆரமும், சீனத்தின் பட்டும் விரவி அகல் உலகுக்கு அளித்த மாநிலம் தென்னகம். ஆனால் அலையிடைப் பிறவா அரும்புகழ் முத்தும், மலையிடை விளையா மாணிசை மணியும், மண்ணிடைப் பொலியா வண்மை சால் பொன்னும், நுண்ணூயிர்க் குலம்படா நோன்புடைப் பவழமும் கொண்டு கோத்திழைத்து அத்தென்னகத்துக்கு வரலாறளித்த பொன்மணி முத்து மாலையாக விசயநகரப் பேரரசு விளங்குகிறது. பொன்மணி முத்துமாலையின் புகழரங்க மையமான பூவிழைத்த பொலங்காழ்ப் பதக்கமாய் விளங்கும் திருவுடையது அவ்விசயநகர மரபின் புகழ் மகுடமான கிருட்டிண தேவராயன் ஆட்சி. சீருடன் விளங்கிய தென்னகத்தின் வாழ்வுக்கும் ஒரு சீர்நிறைவாக அவ்வாட்சியும் அதனை ஏந்திய விசயநகரத்தின் மூன்றாம் மரபாகிய துளுவ மரபின் அரசும் விளங்குகின்றன.

புயலும் காற்றும் மழையும் இயற்கையின் ஆற்றல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனித உலகுடனும் வாழ்வுடனும்